ஏ.ஆர் ரகுமான் கச்சேரியில் டிக்கெட் வித்ததே அவர் பையன்தான்!.. என்னப்பா சொல்றிங்க…

News Tamil Cinema News

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் அதிக புகழ்ப்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அவரது முதல் படமாக ரோஜாவில் துவங்கி கடைசியாக வெளியான மாமன்னன் வரை அவரது பாடல்களுக்கான மதிப்பு குறையவே இல்லை.

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். எப்போதும் வெளிநாடுகளில் நடத்துபவர் இந்த முறை சென்னையில் தமிழ் மக்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

ஆனால் அரங்கத்தின் அளவை விடவும் அதிக அளவு டிக்கெட் விற்பனை ஆனதால் அந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இந்த தவறுக்கு ஏ.ஆர் ரகுமான்தான் பொறுப்பு என ஒரு சாராரும், நிகழ்வை நடத்திய அமைப்புதான் பொறுப்பு என மற்றொரு சாராரும் பேசி வருகின்றனர்.

இதை பற்றி இன்னொரு பேச்சும் அடிப்படுகிறது, அதாவது ஏ.ஆர் ரகுமானின் மகன் தான் டிக்கெட் விற்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவரே அதிக டிக்கெட்டுகளை விற்றார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.