Connect with us

இளையராஜா சொன்ன காட்சி! – கேட்டவுடன் காரி துப்பிய கண்ணதாசன்!

Cinema History

இளையராஜா சொன்ன காட்சி! – கேட்டவுடன் காரி துப்பிய கண்ணதாசன்!

Social Media Bar

 தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன்.  அதேபோல இசையமைப்பாளர்களில் மிக முக்கியமான ஒரு இசையமைப்பாளர் இளையராஜா.  இளையராஜா  தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே  கவிஞர் கண்ணதாசன் பிரபலமான பாடலாசிரியராக இருந்தார்.

 இளையராஜா இசையமைத்த பல பாடல்களுக்கு அப்போது கண்ணதாசன் பாடல் வரிகளை  எழுதியுள்ளார்.  எந்த ஒரு பாடலையும் அதன் இசையை கேட்ட உடனேயே  பாடலுக்கு வரிகளை எழுதும் திறன் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன்.

அப்படியாக இளையராஜாவுக்கு நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.  ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடலுக்கான பாடல் வரிகளை எழுத சொல்வதற்காக கண்ணதாசனை சந்திக்க சென்றிருந்தார் இளையராஜா.

அப்போது புகை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் கண்ணதாசன்.  அவரிடம் சென்ற இளையராஜா பாடலுக்கான கதைக்களத்தை கண்ணதாசனிடம் விவரித்தார்.  அதை கேட்டுக் கொண்டிருந்த கண்ணதாசன் திடீரென கீழே துப்பினார்.  சிகரெட் பிடிப்பதால் துப்புகிறாரா அல்லது கதைகளை கேட்டு துப்புகிறாரா என தெரியவில்லை இளையராஜாவிற்கு.

 பிறகு பாடலுக்கான இசையை இளையராஜா பாடி காட்டவும்,  அந்த இசைக்கு ஏற்ற பாடல் வரியை அப்படியே சொல்ல தொடங்கினார் கண்ணதாசன்.  இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் இளையராஜா வெளிப்படுத்தியுள்ளார்.

To Top