Actress
பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல.. அசத்தல் போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!..
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பொதுவாகவே சினிமாவிற்கு வரும் நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்து முக சாயங்களை பூசி கொள்வதும் அடிக்கடி மேக்கப் செய்து கொள்வதும் என்று இருப்பார்கள்.
ஆனால் இப்பொழுது அதில் ஒரு படி மேலே போய் முகத்தில் நிறைய அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறனர். பழைய காலங்களிலேயே நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமாவிற்கு சென்று தனது மூக்கை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைத்துக்கொண்டார்.

அறுவை சிகிச்சை செய்த நடிகை:
முகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக சிகிச்சை செய்யும் முறைகள் தற்சமயம் வந்திருக்கின்றன. அதை வைத்து தான் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மேனன் பார்ப்பதற்கு மிக கவர்ச்சியாக இருக்க மாட்டார். சாதாரணமாகதான் இருந்து வந்தார். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் குறைவாகதான் கிடைத்து வந்தன. சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் கிடைத்து வந்தன.
எனவே கதாநாயகி ஆவதற்கு இது பத்தாது என்று தெரிந்து கொண்டார் ஐஸ்வர்யா மேனன். தனது முக அழகை அதிகரிக்க தொடங்கினார் இதற்காக நிறைய சிகிச்சைகளை மேற்கொண்ட ஐஸ்வர்யா மேனன் திரும்ப சினிமாவிற்கு வரும்பொழுது மொத்தமாக ஆளே மாறி இருந்தார்.

ரீ எண்ட்ரி:
அவரது உதட்டில் துவங்கி புருவம் வரை அனைத்திலும் மாற்றங்கள் இருந்தன மேலும் உடல் எடையும் அதிகரித்து பார்ப்பதற்கு ஹன்சிகா சினிமாவிற்கு அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படி இருந்தார் ஐஸ்வர்யா மேனன்.
இந்த நிலையில் அவருக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு முக மாற்றங்களை செய்த பிறகும் கூட முன்னணி நடிகைகளுக்கு கிடைக்கும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகின்றன. புடவை கட்டி இருந்தாலும் கூட அதிலும் கவர்ச்சியாக தான் தெரிகிறார் ஐஸ்வர்யா மேனன்.
