திருமணத்திற்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாகவே கருப்பாக இருக்கும் பெண்களுக்கு சினிமாவில் எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை.
அதே போலவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நிறைய கஷ்டங்களை அனுபவித்துதான் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆகியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அட்டக்கத்தி மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பொதுவாக கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் அம்மா கதாபாத்திரத்தில் எடுத்த உடனேயே நடிக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்கு கொஞ்சம் அதிகமாக நடிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் காக்கா முட்டை திரைப்படத்தில் அதை சிறப்பாக செய்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. தற்சமயம் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த நிலையில் அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண வாழ்க்கைக்கு தயாராகி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ஏற்கனவே இவருக்கு 34 வயதாகிவிட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவில் உள்ள தயாரிப்பாளர் ஒருவரின் மகனை இவர் திருமணம் செய்துக்கொள்ள போவதாக அரசல் புரசலான செய்திகள் வலம் வருகின்றன.
ஆனால் இன்னும் இதுக்குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை.