Connect with us

திமுகவில் அஜித்தை இணைக்க நடைபெறும் வேலைகள்..? ஓப்பன் டாக் கொடுத்த அரசியல் புள்ளி.!

News

திமுகவில் அஜித்தை இணைக்க நடைபெறும் வேலைகள்..? ஓப்பன் டாக் கொடுத்த அரசியல் புள்ளி.!

Social Media Bar

Political parties have been involved in activities against actor Vijay since he started a party called T.V.K. In this situation, there are talks that DMK party is going to bring actor Ajith into politics

நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதலே அவருடைய அரசியல் செயல்பாடுகள் குறித்து நிறைய பேர் இப்பொழுது கவனிக்க துவங்கியிருக்கின்றனர். அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் த.வெ.க கட்சியின் மாநாட்டை நடத்தினார்.

அந்த மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் பலவும் அதிக சர்ச்சையாக துவங்கியிருக்கின்றன. முக்கியமாக நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவிற்கு எதிராக நிறைய விஷயங்களை பேசி இருந்தார் நடிகர் விஜய்.

அரசியல் கட்சிகளின் செயல்பாடு:

இதனை அடுத்து இது குறித்த விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கட்சியின் தலைவர்களே இதற்கு பதில் அளிக்கவும் துவங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினரான ஹெச். ராஜா சில திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது நடிகர் விஜய்க்கு எதிராக திமுக போட்டியிட வேண்டுமென்றால் நடிகர் அஜித்தின் உதவி தேவைப்படுகிறது.

எனவே அஜித்தை எப்படியாவது திமுக கட்சிக்குள் கொண்டு வருவதற்கான வேலையில் திமுக இறங்கியுள்ளது என்று கூறியிருக்கிறார். இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை என்றாலும் கூட இவர் கூறிய இந்த விஷயம் இப்பொழுது சர்ச்சையாக துவங்கி இருக்கிறது.

To Top