News
மத்த பிரபலங்கள் செய்யாத அந்த விஷயங்களை அஜித் செய்ய காரணம் இதுதான்!.. விளக்கும் பயில்வான் ரங்கநாதன்!..
Actor Ajith: தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு அதிகமான வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்றவு ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து திருப்பூரில் கார்மென்ஸில் பணிபுரிந்து வந்த அஜித்திற்கு அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கிடைத்தது. அதுவும் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவருக்கு கிடைக்கும் என்பதை அவரே எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம். ஏனெனில் அமராவதி திரைப்படத்திற்கு பிறகு ஒரு பேட்டியில் பேசிய அஜித் திரும்பவும் சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் துவங்கி விட்டு திருப்பூர் செல்ல வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று கூறியிருந்தார்.
அஜித்தின் பழக்கம்
ஆனால் அஜித்தின் வாழ்க்கை அதன் பிறகு முழுமையாக மாறிவிட்டது. இந்த நிலையில் அஜித்தின் ஒரு பழக்கம் குறித்து பயல்வான் ரங்கநாதன் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பொதுவாகவே இந்திய அளவில் பிரபலங்கள் என்பவர்கள் குடும்பத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

சிவாஜி கணேசனில் துவங்கி இப்போது இருக்கும் நடிகர்கள் வரை நடிப்புக்காக குடும்பத்திற்கு அதிக ஈடுபாடு அளிக்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட ஒரு நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மட்டும் தான்.
தனது மகனின் பள்ளி ஆண்டு விழாவிற்கு கூட தவறாமல் செல்லக்கூடியவர் அஜித். அதே போல தனது குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா செல்வது தனது குடும்ப உறுப்பினர்களுடன் விழா நடத்துவது என்று எப்போதுமே தனது குடும்பத்துடன் இணைந்தே இருப்பவர் நடிகர் அஜித். தற்சமயம் கூட அவரது மகனின் பிறந்தநாளை வெகுவாக கொண்டாடியிருந்தார். தமிழ் சினிமாவில் வேறு எந்த பிரபலமும் அஜித் மாதிரி கிடையாது என்று கூறுகிறார் ரங்கநாதன்.
