News
முகுந்த் சார் போன்ல சொன்ன அந்த விஷயம்.. அதைதான் அமரன் படத்தில் காட்சியா வச்சேன்.. சீக்ரெட்டை கூறிய இயக்குனர்.!
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு வருவதற்கு முக்கிய காரணமே நிஜமான ராணுவ வீரர் ஒருவரின் கதையை படமாக்கி இருக்கிறார்கள் என்பது தான்.
முகுந்த் வரதராஜன் என்கிற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் கதையை தான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படமாக்கி இருக்கிறார். முக்கியமாக சிவகார்த்திகேயனுக்கும் இது ஒரு வகையில் முக்கியமான படமாகும்.
ஏனெனில் இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சீரியசான கதாபாத்திரத்தை கொடுத்து விஜய் அஜித் மாதிரியான கமர்சியல் நடிகர்கள் லிஸ்டில் கொண்டு வந்து சேர்த்து இருப்பது அமரன் திரைப்படம்தான்.
அமரன் படத்தில் வந்த காட்சி:
இந்த நிலையில் அமரன் படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து அதிக பேச்சுக்கள் இருந்து வந்தன. அமரன் திரைப்படத்தில் முகுந்த் இறந்துவிட்ட செய்தி வருவதற்கு முன்பு சாய்பல்லவி கதாபாத்திரம் போய் படுத்து உறங்குவதாக ஒரு காட்சி இருக்கும்.
ஏன் அந்த காட்சி வைக்கப்பட்டது என்று இயக்குனரிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த இயக்குனர் முகுந்த் வரதராஜன் இறப்பதற்கு முதல் நாள் அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்பொழுது எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதைப் பற்றி குழப்பிக் கொள்ளாதே? நிம்மதியாக தூங்குவதற்கு கற்றுக் கொள் என்று கூறி இருப்பார்.
அதைதான் முகுந்த் வரதராஜனின் மனைவி செய்வதாக நான் காட்சியில் வைத்திருக்கிறேன் என்று விளக்கி இருந்தார்.
