அமரன் படத்தால் பயத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்.. உண்மையை சொன்ன தயாரிப்பாளர்..!

கமர்சியல் நடிகர்களை பொருத்தவரை ஒரு பக்கம் வெற்றி படங்களை கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஒரு பக்கம் அது கவலையை கொடுக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். நடிகர் கமலஹாசனின் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது.

சொல்ல போனால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூலை கொடுத்த படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. 300 கோடியை தாண்டி திரைப்படம் வசூல் சாதனை செய்திருக்கிறது.

அமரன் படம் கொடுத்த பயம்:

amaran
amaran
Social Media Bar

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளமும் அடுத்த படத்திற்கு உயரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயன் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் கூறும்போது சிவகார்த்திகேயன் இப்பொழுது 300 கோடி வெற்றியை கொடுத்து விட்டார்.

இனி அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களாக இருக்கும். எனவே இதை தாண்டிய வெற்றியை சிவக்கார்த்திகேயன் கொடுக்க வேண்டி இருக்கும். அடுத்து அவர் நடிக்கும் திரைப்படத்தில் 310 கோடியாவது அவர் வசூல் சாதனை காட்டியாக வேண்டும்.

இதனால் சிவகார்த்திகேயனுக்கு பொறுப்பு இப்பொழுது அதிகமாக இருக்கிறது. எனவே இது குறித்து பயத்தில் தான் இருப்பார் என்று கூறியிருக்கிறார் தனஞ்செயன்.