Hollywood Cinema news
OTT: விஜய்யின் கோட் மாதிரியான கதை.. Butterfly – Official Trailer | Prime Video அசத்தல் வெப் சீரிஸ்.!
நிறைய ஆக்ஷன் காட்சிகளை கொண்ட திரைப்படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் எப்பொழுதுமே வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்தியா வரை வந்து பிரபலம் அடைந்திருக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், மிஷின் இம்பாசிபிள் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே இந்த மாதிரி ஆக்ஷன் கதைக்களங்களை கொண்ட திரைப்படங்கள் தான்.
அந்த வகையில் தற்சமயம் அமேசான் Butterfly என்கிற ஒரு வெப்சீரிஸை உருவாக்கி இருக்கிறது. இதன் கதைப்படி அப்பா மற்றும் மகள் இருவரும் இணைந்து அரசுக்கு எதிராக செயல்படுவது போல கதை அமைந்து உள்ளது.
அரசுக்காக வேலை செய்து வந்த ஏஜெண்டாக இருக்கும் தந்தை ஒரு காலகட்டத்தில் இறந்து விடுகிறார். பிறகு திடீரென்று சில வருடங்களுக்குப் பிறகு அவர் தனது மகளின் முன்பு தோன்றுகிறார். அதற்குப் பிறகுதான் இது அரசு செய்த சதி வேலை என தெரிகிறது.
இதற்கு நடுவே அரசாங்கத்தில் அதே மாதிரி ஏஜெண்டாக வேலைக்கு சேரும் மகள் கதாபாத்திரமும் சண்டை போடுவதில் திறமை மிக்கவராக மாறியிருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருமே அரசுக்கு எதிராக திரும்பி செய்யும் காரியங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியஸின் கதைகளும் செல்கிறது இதன் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
