News
எலான் மஸ்க் அம்பானி இடையே மோதல்.. முடித்து வைத்த மத்திய அரசு..! வருத்தத்தில் அம்பானி..!
உலகம் முழுக்க சேட்டிலைட் முறை மூலம் இணையத்தை வழங்க வேண்டும் என்கிற ஆசையில் ஸ்டார் லிங்க் என்கிற நிறுவனத்தை தொடங்கினார் அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்.
இந்த நிறுவனம் உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனாலும் உலக நாடுகள் அனைத்துமே இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான், ஈரான் சீனா மாதிரியான நாடுகள் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.
ஆனாலும் மங்கோலியா, ஏமன், இந்தோனேசியா மாதிரியான நாடுகளில் ஏற்கனவே ஸ்டார்லிங்க் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று வெகு வருடங்களாகவே எலான் மஸ்க் போராடி வருகிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை செயற்கைக்கோளுக்கான அலைக்கற்றைக்கான நடைமுறை என்பது ஏலம் முறையில்தான் இருந்து வந்தது.
எலான் மஸ்க் மோதல்:
இந்த நிலையில் இந்திய தொழிலதிபரான அம்பானி இந்த ஏலம் முறைக்குதான் ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் எலான் மஸ்க் மற்றும் அம்பானிக்கு இடையே பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து எலான் மஸ்க் இதுக்குறித்து கூறும்போது செயற்கை கோள் அலைக்கற்றைகளை பொறுத்தவரை அதை நிர்வாக அழகில் தான் வழங்க வேண்டுமே தவிர ஏல முறையில் வழங்க கூடாது. அது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.
மேலும் பல வளர்ந்த நாடுகளை நிர்வாக அளவு முறையில்தான் அமல்படுத்தியிருக்கின்றன என்று விளக்கி இருந்தார் எலான் மஸ்க். இந்த நிலையில் இது குறித்து யோசித்த இந்திய அரசு தற்சமயம் நிர்வாக அழகில்தான் செயற்கைக்கோள் அலை கற்றைகளை வழங்க முடியும் என்று அறிவித்திருக்கிறது .
தன் மூலமாக இந்தியாவில் இணையத்தில் மேலும் பல புதிய தொழில்நுட்பங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் வேறு நாட்டு நிறுவனங்களுக்கு இணையம் தொடர்பான விஷயங்களில் அனுமதி கொடுப்பது நமது தகவல்களை அவர்கள் எடுத்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
அதனால்தான் சீனா போன்ற வளர்ந்த நாடுகளே ஸ்டார்லிங்க் மாதிரியான நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
