News
வெள்ளை மாளிகையிலேயே போதை பொருள்.. எலான் மஸ்க் செயலால் ஆடிப்போன அதிபர்..!
எலான் மஸ்க் மற்றும் அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது தற்சமயம் சென்று கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் அரசாங்கத்திற்கே உதவக்கூடிய அளவில் பெரிய வளர்ச்சியை கண்ட ஒரு தொழிலதிபராக இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் மூலமாக தான் அமெரிக்கா சாட்டிலைட் போன்றவற்றை விண்ணுக்கு ஏவி வருகின்றன.
அந்த அளவிற்கு எலான் மஸ்க் அரசுக்கு உதவி செய்யும் செய்து வரும் ஒரு கார்ப்பரேட் ஆக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் இவருக்கும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே சச்சரவுகள் போய்க்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் அதிபர் ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் பேசும் பொழுது வெள்ளை மாளிகையில் எலான் மஸ்க் போதை பொருள் பயன்படுத்தியதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அது உண்மையா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் பயன்படுத்தி இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.
