Cinema History
அவரை விட இந்த பாட்டை நல்லா பாடாமல் விட மாட்டேன்! – போட்டி போட்டு பாட்டு பாடிய பாடகி!
தமிழ் சினிமாவில் பல பாடல்கள் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின் கதை இருக்கும். அந்த மாதிரியான நிகழ்வுகள் சில பிரபலமான பாடல்களுக்கு நடந்திருக்கும்.
ஏ.ஆர் ரகுமான் தமிழில் முதன் முதலாக இசையமைத்த திரைப்படம் ரோஜா. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்த பிறகு ஏ.ஆர் ரகுமானின் மார்க்கெட் ஒரே படத்தில் வேறு இடத்திற்கு சென்றது. அதன் பிறகு பல படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்தார்.
ரோஜா படத்தில் வரும் பாடல்களில் மிகவும் முக்கியமான பாடல் உயிரே உயிரே எனும் பாடல். கவிபேரரசு வைரமுத்து வரிகள் எழுதி ஹரிஹரன் மற்றும் சித்ரா பாடி இந்த பாடல் உருவானது. திரைத்துறையில் பிறகு பெரிய ஆட்களாக பணியாற்றிய கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய பாடல்.
அந்த பாடல் உருவாகும்போது முதலில் வந்து சித்ரா அவருக்கான பெண் பாடல் வரிகளை பாடிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகுதான் ஹரிஹரன் வந்தார். ஹரிஹரன் பாடிவிட்டு சென்ற பிறகு பாடலை கேட்பதற்காக சித்ரா வந்துள்ளார். பாடலை கேட்டதும் சித்ரா அழத் துவங்கிவிட்டார்.
ஏன் சித்ரா அழுகிறார் என கேட்டுள்ளார் வைரமுத்து. என்னை விட ஹரிஹரன் இந்த பாட்டை நல்லா பாடி இருக்கார். நான் அவரை விட சூப்பரா பாடாம விட மாட்டேன். என கூறி அந்த பாடலை மறுபடியும் பாடி உள்ளார் சித்ரா.
இப்படி போட்டி போட்டு பாடி உருவான பாடலாக வந்தததால்தான் உயிரே உயிரே பாடல் இன்னமும் மக்கள் மத்தியில் பிடித்த பாடலாக இருந்து வருகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்