TV Shows
அட கொடுமையே இந்த லாஜிக் கூட தெரியாமதான் சீரியல் எடுக்குறீங்களா… ஆனந்த ராகம் சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள்..!
சன் டிவியில் சில காலங்களாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலாக ஆனந்த ராகம் சீரியல் இருந்து வருகிறது. சீரியல்களை பொறுத்தவரை அவற்றை எடுக்கும் பொழுது பெரிதாக அதன் கதை தொடர்பாக ஆய்வு எதுவும் செய்வது கிடையாது.
நிறைய லாஜிக் மிஸ்டேக்குடன் தான் இப்பொழுது சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்த சீரியல்களில் வரும் காட்சிகளும் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
ஆனந்த ராகம் சீரியல்:
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலில் அதன் கதைக்குள் நிறைய மிஸ்டேக் இருப்பது குறித்து ரசிகர்கள் தற்சமயம் பேச துவங்கியிருக்கின்றனர். அதாவது நாடகக் கதையின் படி அதில் கதாநாயகனின் சொத்துக்களை அவருக்கு தெரியாமல் ஏமாற்றி வாங்குவதாக நாடகத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக இந்த மாதிரியான கதை அமைப்பை பழைய திரைப்படங்களில் கூட பார்த்திருக்கலாம். வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது அவருக்கு தெரியாமலேயே கைநாட்டு வாங்குவது போன்றவற்றை செய்து சொத்துக்களை அபேஸ் செய்து விடுவார்கள்.
ஆனால் இப்பொழுது சட்டப்படி அதெல்லாம் செய்ய முடியாது ரிஜிஸ்டர் ஆபீஸ் எனப்படும் சார் பதிவாளர் முன்னிலையில் தான் சொத்து மாற்றம் என்பது செய்ய முடியும் என்கிற அளவில் சட்டம் மாற்றப்பட்டு விட்டது இன்னமும் 1990களில் எடுக்கப்பட்ட விஷயத்தை ஏன் நாடகத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஆன்ந்த ராகம் சீரியலை விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.