முதல் படத்துலையே லிப் லாக்கா? –  அதிர்ச்சியை ஏற்படுத்திய அஜித் பட நடிகை!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு பெரும் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளனர். அப்படியாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

Social Media Bar

சிறு வயது முதலே மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு பிள்ளை கதாபாத்திரமாக நடித்தார்.

இந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய குயின் என்கிற வெப் தொடரிலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் வளர்ந்துவிட்டதால் அனிகா தற்சமயம் ஓ மை டார்லிங் என்கிற மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள சினிமா மற்றும் தமிழ் சினிமாக்களில் பொதுவாக முதல் படங்களில் கதாநாயகிகள் அவ்வளவாக கவர்ச்சி காட்டுவதில்லை.

ஆனால் அனிகா தனது முதல் படத்திலேயே கதாநாயகனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் பலரும் அனிகாவை விமர்சித்து வருகின்றனர்.

ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.