Entertainment News
செல்ஃபி எடுத்து க்யூட் போஸ்.. புடவையில் அசத்தும் அனுபாமா!..
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்து அதன் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன்.
பிரேமம் திரைப்படத்தில் மேரி என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை அனுப்பாமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படம் தென் இந்தியா முழுவதும் கொடுத்த வெற்றியை அடுத்து அந்த திரைப்படத்தை தெலுங்கிலும் படமாக்கினார்.
தெலுங்கில் அறிமுகம்:
தெலுங்கில் அந்த திரைப்படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படத்திலும் மேரி கதாபாத்திரத்தில் அனுப்பாமா பரமேஸ்வரன்தான் நடித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கு மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின.
அடுத்த இரண்டு வருடங்களிலேயே தமிழில் வாய்ப்பை பெற்று கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் அதற்கு பிறகு தள்ளி போகாதே என்கிற ஒரு தமிழ் படத்திலும் நடித்தார். பிறகு அவருக்கு பெரிதாக தமிழில் வாய்ப்புகள் வரவில்லை.
இருந்தாலும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு நடுவே தெலுங்கில் கொஞ்சம் கொஞ்சமாக அனுபாமாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது கவர்ச்சி காட்டினால்தான் தெலுங்கில் தொடர்ந்து நடிக்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது.
அசத்தும் போஸ்:
இதனால் அதுவரை பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியில் இறங்கினார் கார்த்திகேயன் 2 என்கிற திரைப்படத்தில் நடிக்கும் போது கொஞ்சமாக கவர்ச்சி காட்டி நடித்தார் அனுபாமா. அதனை தொடர்ந்து இப்பொழுது அதிக கவர்ச்சிகள் இறங்கி தில்லு ஸ்கொயர் 2 என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இருந்தாலும் முன்பு கிடைப்பது போல வாய்ப்புகள் என்பது இப்பொழுது அவருக்கு கிடைப்பது கிடையாது. எனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பதன் மூலம் வாய்ப்புகளை பெறலாம் என்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனுபாமா.
அந்த வகையில் புடவை கட்டி சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன இந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்