டைட்டில் வின்னரும் தெரிஞ்சுடுச்சு, இரண்டாம் மூன்றாம் வின்னரும் தெரிஞ்சுடுச்சு!.. பிக்பாஸ் ஃபைனல் ரிசல்ட்!.

Bigg Boss Tamil News Tamil Cinema News TV Shows

Bigboss Archana : மூன்று மாதங்களுக்கு முன்பு துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல சண்டைகளையும் வன்மங்களையும் தாண்டி தற்சமயம் அதன் முடிவை எட்டி உள்ளது.

இன்றோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவை காண இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் ஜெயித்தார்கள் என்பதே மக்கள் மத்தியில் கேள்வியாக இருந்து வந்தது.

அது குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகி இருக்கின்றன. அதன்படி பிக் பாஸில் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்த்தபடி அர்ச்சனா தான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது முதலே அர்ச்சனாவிற்கு வரவேற்பு அதிகமாக தான் இருந்து வந்தது.

முக்கியமாக அர்ச்சனாவையை ஜெயிக்க வைத்ததில் மாயாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறலாம். ஏனெனில் மாயா அர்ச்சனாவை அழ வைத்ததன் காரணமாகத்தான் அர்ச்சனாவிற்கு அதிகமான ரசிக்கப்பட்டாளம் உருவானது.

இந்த நிலையில் அர்ச்சனா பிக் பாஸ் இந்த சீசனின் டைட்டிலை ஜெயித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை மணி பிடித்திருக்கிறார். பிக் பாஸ் சீசன் துவங்கிய முதல் நாளில் இருந்து போட்டியில் இருப்பவராக மணி, விஷ்ணு மாயா மூவரும் இருக்கின்றனர். மூன்றாவது இடத்தை மாயா பிடித்துள்ளார். நான்காவது இடத்தை தினேஷ் பிடித்திருக்கிறார்.

ஐந்தாவது இடத்தைதான் விஷ்ணு பிடித்து இருக்கிறார் இது மாயாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மாயாவிற்குதான் முதலிடம் கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் இதோடு இந்த சீசன் பிக் பாஸ் முடிவடைகிறது.