Tamil Trailer
அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் நடிக்கும் சீதா பயணம்.. வெளியான டீசர்.. கதையை பார்த்தீங்களா?.
நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று பல நாள் ஆசை இருந்தது. தமிழில் பட்டத்து யானை திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் அதற்குப் பிறகும் கூட அவருக்கு கதாநாயகியாக பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா திரும்ப தமிழில் நடிப்பாரா என்று பலருமே யோசித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்சமயம் அர்ஜுன் இயக்கத்தில் சீதா பயணம் என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். காதல் திரைப்படமாக அமைந்துள்ள இந்த திரைப்படம் அதே சமயம் ஆக்ஷன் திரைப்படமாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் பார்க்கும் பொழுது ஆரம்பத்தில் கதை காதல் கதையாக தெரிந்தாலும் போக போக நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட தெலுங்கு பாணியில் இந்த படத்தின் கதைகளம் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
அர்ஜுனின் இயக்கத்தில் வெளி வருவதால் இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
