Bigg Boss Tamil
இந்த அடிப்படை விஷயங்கள் கூட எங்களுக்கு கொடுக்கல.. வந்த உடனேயே கடுப்பான அர்னவ்.. ஏன் பிக்பாஸ் இப்படி பண்ணுனீங்க?.
நேற்று பிக் பாஸில் 18 போட்டியாளர்கள் உள் நுழைந்த நிலையில் தற்சமயம் இன்றிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து முதல் நாள் நிகழ்வு சென்று கொண்டுள்ளது.
இன்றிலிருந்து ஹாட்ஸ்டார் சேனலிலும் லைவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஓட துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கு கொண்ட முதல் நாளே அவர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது.
தாவது ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமுமாகதான் இந்த ஒட்டுமொத்த பிக் பாஸில் விளையாட போகிறார்கள். போன முறை பெண்கள் பாதுகாப்பிற்கு பிரச்சினை வந்த காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
வசதி குறைவு:
ஆனால் ஒரு தரப்பில் மட்டுமே அதிக வசதிகளும் மற்றொரு பக்கம் வசதிகள் குறைவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எப்படி இந்த விளையாட்டில் செல்ல போகிறது என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருந்து வருகிறது.
மேலும் போன பிக் பாஸில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வசதிகள் பலவும் இப்பொழுது இல்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. தற்சமயம் உள்ளே சென்று இருக்கும் போட்டியாளர் ஆர்னவ் இந்த விஷயங்களை கவனித்து பேசி வருகிறார்.
போன முறை பிக் பாஸில் இருந்தவர்களுக்கு நிறைய வசதிகள் இருந்தது. இந்த முறை உடற்பயிற்சி செய்வதற்கான சாதனங்கள் கூட இல்லை. மேலும் குளிப்பதற்கு முன்பு நீச்சல் குளம் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை.
டாஸ்க் கொடுக்கும் பொழுது அதில் தவறு செய்பவர்களை அடைப்பதற்கு சிறை ஒன்று வைக்கப்பட்டிருக்கும் அதுவும் இந்த முறை இல்லை ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறி வருகிறார் அர்னவ்.
