அருள்நிதியின் அடுத்த திரில்லர் ஸ்டார்ட்டிங்..! – பட ஷூட்டிங் எப்போ?

அருள்நிதி என்று சொன்னாலே “ஓ த்ரில்லர் க்ரைம் திரைப்படமா?” என கேட்கும் அளவிற்கு வரிசையாக த்ரில்லர் மற்றும் க்ரைம் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருபவர் அருள்நிதி.

Social Media Bar

சமீபத்தில் அவர் நடித்து வெளியான டைரி திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் அந்த திரைப்படத்தை புகழ்ந்தனர். ஆனால் அருள்நிதிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த முக்கியமான த்ரில்லர் திரைப்படம் டிமாண்டி காலனி. 

எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்.  முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார். அஜய் ஞானமுத்து மற்றும் அருள்நிதி இருவருக்குமே அவர்களது பெயரை வெளிக்காட்டும் திரைப்படமாக அமைந்த படம் டிமாண்டி காலணி.

எனவே அதன் இரண்டாம் பாகம் என வரும்பொழுது அதை விட ஒரு படி மேல் சென்று படத்தை எடுக்க வேண்டும். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அஜய் ஞானமுத்து இயக்கி வெளியான கோப்ரா திரைப்படம் மக்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

எனவே இந்த படத்தை வெற்றி படமாக மாற்றுவதன் மூலம் அஜய் ஞானமுத்து இழந்த அவரது இடத்தை ரசிகர்களிடையே பெற முடியும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 5 முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.