அருண் விஜய் தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக கொஞ்சம் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வரும் திரைப்படங்களில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ரெட்டத்தல.
இந்த திரைப்படத்தை இயக்குனர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே மற்றும் உதயநிதி நடித்த கெத்து ஆகிய இரு திரைப்படங்களும் இவர் இயக்கிய படங்களே.
அந்த இரு திரைப்படங்களுமே ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் அளவிற்கு அமைந்திருந்தது. இந்த நிலையில் ரெட்டத்தல திரைப்படத்தில் அருண் விஜய்யோடு சேர்ந்து சித்தி இதானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து பெரிதாக எதிர்பார்ப்பு என்பது இருந்தது. ஆனால் இந்த படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. பெரிதாக வசூலையும் பெற்று தரவில்லை. இந்த படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் இதுவரை படம் 1.8 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதும் கேள்விக்குரியான விஷயமாகவே இருக்கிறது.









