மனிதர்களை மட்டுமே தின்னும் அரக்கர்கள்… அவர்களை கருவறுக்க கிளம்பும் ஹீரோ.. அனிமே லவ்வர்களை ஈர்க்கும் Attack on Titan கதை.!

ஜப்பான் அனிமேக்களுக்கு இப்போது தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எப்போது நருட்டோ மக்கள் மத்தியில் பிரபலமானதோ அது முதலே அனிமே சீரிஸ்கள் மீது மக்களுக்கு ஈடுபாடு வர துவங்கியுள்ளது.

க்ரஞ்ச்ரோல் மாதிரியான அனிமே ஓ.டி.டிகளும் கூட நிறைய ஜப்பான் அனிமேக்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்னும் சிலர் ஜாப்பனிஸ் அல்லது ஆங்கிலத்திலேயே அந்த தொடர்களை பார்க்கின்றனர்.

அப்படியாக தற்சமயம் அனிமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராகதான் இந்த Attack on Titan தொடர் இருந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு காமிக்ஸாக வந்த இந்த கதை இப்போது அனிமேவாக உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை 3 சீசன்கள் வந்துள்ள இந்த படத்தின் 4 ஆவது சீசனில் இரண்டு புதிய எபிசோடுகள் மார்ச் 4 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் திரைப்படமாக வெளியாக இருக்கிறது.

Social Media Bar

கதை:

கதைப்படி தொடரின் நாயகனாக எரன் ஈகர் என்கிர கதாபாத்திரம் இருக்கிறது. மரியா சுவர், ரோஸ் சுவர், மற்றும் சினா சுவர் என்கிற 3 சுவர்களை பாதுப்பாக கொண்டு அமைந்த நகரத்தில் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக டைட்டன்ஸ் என்கிற ஜந்துக்கள் இருப்பதே இதற்கு காரணமாகும்.

இந்த ஜந்துக்களுக்கு மனித கறிதான் பிடிக்கும். மிகவும் பெரிதாக இருக்கும் இந்த டைட்டன்களிடம் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள மனிதர்கள் இந்த சுவற்றை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர்.

ஆனாலும் சமயங்களில் அந்த சுவற்றை உடைத்துக்கொண்டு உள்ளே வரும் டைட்டன்கள் மனிதர்களி தின்று தீர்க்கின்றன. இப்படியாக கதாநாயகன் ஏரனின் தாயை அவன் கண் முன்னே உட்கொள்கின்றன டைட்டன்கள்.

அதனை தொடர்ந்து அவற்றின் மீது கோபம் கொள்கிறான் ஏரன் ஈகர் டைட்டன்களை வேட்டையாடும் குழுவில் போய் சேர்கிறான். உலகில் உள்ள கடைசி டைட்டன்களை அழிக்கும் வரை தான் ஓய போவதில்லை என சபதம் எடுக்கிறான்.

இந்த நிலையில்தான் எரனாலேயே டைட்டனாக மாற முடியும் என்கிற விஷயம் தெரிய வருகிறது. அவனுடைய தந்தை அவன் உடலில் செய்த சோதனையின் காரணமாக எரனால் ஒரு டைட்டனாக மாற முடியும். அப்படி மாறும்போது அவன் தொடர்ந்து டைட்டன்களை கொன்று மக்களை பாதுகாக்க துவங்குகிறான்.

இதனை கொண்டு விறு விறுப்பாக செல்லும் கதையாக Attack on Titan சீரிஸ் உள்ளது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.