Connect with us

போன இடத்தில் மாரடைப்பில் சிக்கிய ஊழியர்.. ஏ.வி.எம் செட்டியார் எடுத்த நடவடிக்கை!..

avm chettiar

Cinema History

போன இடத்தில் மாரடைப்பில் சிக்கிய ஊழியர்.. ஏ.வி.எம் செட்டியார் எடுத்த நடவடிக்கை!..

Social Media Bar

AV meiyappa chettiyar: தமிழ் சினிமாவில் நிர்வாக திறனில் பெரும் ஆளுமையாக இருந்தவர் ஏவி மையப்ப செட்டியார். ஒரு வடிவேலு காமெடியில் தமிழ் சினிமாவை கண்டுபிடித்தது யார் என்று கேட்கும் பொழுது ஏவி மெய்யப்ப செட்டியார் என வடிவேலு கூறுவார்.

கிட்டத்தட்ட தமிழ் சமூகத்தில் பலரும் சினிமாவை கண்டுபிடித்ததே ஏ.வி மெய்யப்ப செட்டியார்தான் என்று நம்பும் அளவிற்கு படங்களை தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதாக உதவியவர் ஏவி மெய்யப்ப செட்டியார்.

கமல்ஹாசனை தமிழ் துறைக்கு அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இவர் சிறந்த நிர்வாக திறன் கொண்டவர் என எப்போதும் இவரைப் புகழ்ந்து பலரும் பேசுவது உண்டு.ஏனெனில் பல படங்கள் தயாரித்த போதும் கூட ஏவிஎம் நிறுவனம் எப்போதுமே தோல்வியை கண்டது கிடையாது.

avm chettiar
avm chettiar

அது மட்டுமன்றி அவருடன் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கூட மிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் ஏவி மெயப்ப செட்டியார். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. கேரளாவில் ஒரு வேலையாக ஏவிஎம் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு வரவே அவரது அறையில் இருந்து ஏவி மெயப்ப செட்டியாருக்கு போன் செய்து நெஞ்சுவலி வந்திருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஏவி மெய்யப்ப செட்டியார். நீ அந்த ரூமிலேயே படுத்துக்கொள் கதவை பூட்டிக்கொள் யார் வந்தாலும் கதவை திறக்காதே என்று கூறிவிட்டு பிறகு அங்கு கேரளாவை சேர்ந்த அவருக்கு தெரிந்த மருத்துவருக்கு போன் செய்தார்.

இன்னும் பத்து நிமிடத்தில் அந்த ஹோட்டலுக்கு சென்று அங்கு எனது தொழிலாளி இருப்பார் அவருக்கு உடனே சிகிச்சை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த ஹோட்டல் அறைக்கான சாவியை ஹோட்டலில் வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரை நான் கதவை கூட திறக்க கூடாது என்று கூறியிருக்கிறேன் என்றும் கூறியுள்ளா.

உண்மையில் மாரடைப்பு வந்தால் நமது காலை நாம் நகர்த்தக்கூட கூடாது என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். அதனை தெரிந்து கொண்ட ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தனது ஊழியருக்கு சரியான ஆலோசனையை வழங்கியிருந்தார். அந்த அளவிற்கு ஊழியர்கள் மீது கூட அதிக கவனம் செலுத்துபவராக இவர் இருந்தார்.

To Top