டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் அவதார்..? – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

உலக அளவில் மக்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு திரைப்படம்தான் அவதார் 2. அவதார் முதல் பாகம் 2009 இல் வந்த நிலையில் இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் வரிசையாக அவதார் திரைப்படத்தின் மற்ற பாகங்கள் வர இருக்கின்றன.

Social Media Bar

இந்த நிலையில் அவதார் 2 திரைபடமானது இந்த வருடம் டிசம்பர் மாதம் வர இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்காக உலகமே 18 வருடங்கள் காத்திருந்தது அவதாருக்காகத்தான் இருக்கும். அவதார் 2 திரைப்படமானது அவதார் த வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது.

அவதாரை கண்டு அலறிய அக்குவாமேன்! – ரிலீஸ் தேதி மாற்றம்!

இதை வைத்து திரைப்படம் அதிகமாக தண்ணீரை கதையாக கொண்டு போகும். வித்தியாசமான நீர் வாழ் உயிரினங்கள் அதில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


அவதார் 2 திரைப்படத்தின் ட்ரைலர் ஆனது வரும் மே 6 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அதே மே 6 ஆம் தேதிதான் மார்வெல் சினிமாஸின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ் வெளியாக இருக்கிறது. ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படத்தில் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்சை ஓபன் செய்ததன் தொடர்ச்சியாக இந்த படம் வருகிறது.


எனவே டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தோடு அவதார் ட்ரைலரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பவர்களுக்கு அவதார் 2 ட்ரைலரை பெரிய ஸ்கீரினில் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. மார்வெல் இதற்கடுத்து ஜூலை மாதம் தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தை வெளியிட உள்ளது.