Latest News
இந்து மதத்துல சொல்லி கொடுத்தத கிருஸ்துவம் இஸ்லாம்ல சொல்லி கொடுக்கலை!.. லால் சலாம் தடை குறித்து பயில்வான் ரங்கநாதன் கருத்து!..
Bailwan ranganathan : தற்சமயம் ரஜினி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். பொதுவாகவே இதுவரை ரஜினிகாந்த் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் பெரிதாக நடிக்காத பட்சத்தில் இந்த திரைப்படம் ஒரு மதிப்பு வாய்ந்த திரைப்படமாக அமைந்திருக்கிறது.
மேலும் மத நல்லிணக்கத்தை பேசும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை சில அரபு நாடுகள் வெளியிடுவதற்கு தடை செய்து இருக்கின்றன.
மத நல்லிணக்கம் பற்றி தானே படம் பேசுகிறது பிறகு எதற்காக இந்த படத்தை தடை செய்திருக்கிறார்கள் என பார்க்கும் பொழுது அந்த படத்தில் உள்ள சில வசனங்கள் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாக அவர்கள் நினைத்ததால் படம் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறும் பொழுது ரஜினி அந்த படத்தில் ஒரு வசனம் பேசி இருப்பார் அதாவது மதத்தையும் நம்பிக்கையையும் மனதிற்குள் வை, அதற்கு மேலே மனித நேயத்தை வை என்று கூறி இருப்பார்.
பொதுவாக இந்து மதத்தை பொறுத்தவரை மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுவார்கள் அம்மா அப்பா ஆசிரியர் இவர்கள் மூவருக்கு பிறகு தான் தெய்வம் என்றுதான் இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் தாய் தந்தையை விடவும் முக்கியமானது கடவுள் தான் என்று தான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே அதற்கும் மேலாக மனித நேயத்தை வைக்க வேண்டும் என்று ரஜினி கூறியது அவர்களுக்கு உறுத்தலான விஷயமாக இருந்திருக்கிறது. மதத்திற்கு மேலான விஷயம் என்ற ஒன்றே அவர்களுக்கு கிடையாது என கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன். தற்சமயம் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்திருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்