Bigg Boss Tamil
பிக்பாஸ் சீசன் 6 வின்னர் யார் தெரியுமா? உண்மையை சொன்ன மகேஸ்வரி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முந்தைய பிக்பாஸ் தொடர்களை விட அதிகளவில் சண்டை, சச்சரவுகள் தொடர்கின்றன.
அசீம், தனலெட்சுமி போன்றவர்கள் அதிகம் கோபமாக கத்துவதால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், நிவா, ராம் போன்றவர்கள் எந்த சத்தமும் இன்றி அமைதியாக ஸ்கோர் செய்ய முயல்கிறார்கள்.
கடந்த வாரங்களில் சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி என பலரும் எலிமினேட் ஆனார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் எலிமினேட் ஆனது பற்றி மகேஸ்வரி பேசியுள்ளார்.
அதில் அவர் பிக்பாஸ் சீசன் 6ல் விக்ரமன்தான் வெற்றி பெறுவார் என கணிப்பதாக கூறியுள்ளார். ஏனென்றால் அசீம், தனலெட்சுமியிடம் இல்லாத ஒன்று விக்ரமனிடம் இருக்கிறது. அது சரியான நிலைபாடு. அதனால் அவர் இறுதி வரை வருவார் என கூறியுள்ளார்.