Bigg Boss Tamil
எங்களை பத்தி உருட்டாம சரியா பேசுங்க!.. ஒண்ணு கூடி அர்ச்சனாவை அடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!.
Biggboss Tamil Archana : பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே வந்தாலும் கூட ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக மாறியுள்ளார் அர்ச்சனா. அதே போல வைல்ட் கார்டு வழியாக வந்து தற்சமயம் இறுதி வரை வந்துள்ளார் விஜய். இன்னும் ஓரிரு வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது.
பல பெரும் போட்டியாளர்கள் எல்லாம் எலிமினேட் ஆன நிலையில் மாயா, அர்ச்சனா, விஜய், மணி, விஷ்ணு,தினேஷ் ஆகியோர் மட்டுமே தற்சமயம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்க்காக ஒவ்வொருவரும் தங்களது தனி திறமையை பற்றி கூற வேண்டும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய தனி திறமையை கூறி வந்தனர். அப்போது பேச வந்த அர்ச்சனா பேசும்போது அவர் பேசும்போது யாரும் குறுக்கே பேசக்கூடாது என விதிமுறை வைத்தார். இதனால் கடுப்பான தினேஷ் எங்களை பற்றி குறை கூறாமல் உங்கள் ஸ்டேட்டர்ஜியை மட்டும் கூறினால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என கூறினார்.
இதற்கு மற்ற போட்டியாளர்களும் ஆதரவளித்தனர். இதனால் கோபமான அர்ச்சனா உடனே எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டே வெளியேறினார். இதனை தொடர்ந்து அர்ச்சனாவிற்கு இவ்வளவு கோபம் ஆகாது என கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
