Connect with us

ஒரே நேரத்துல ஆறு பேருக்கும் பாயிண்ட் செய்த பிக்பாஸ்!.. மிட் வீக் எவிக்சனில் அவுட்டான டிக்கெட் யாரு!.

dinesh biggboss tamil

Bigg Boss Tamil

ஒரே நேரத்துல ஆறு பேருக்கும் பாயிண்ட் செய்த பிக்பாஸ்!.. மிட் வீக் எவிக்சனில் அவுட்டான டிக்கெட் யாரு!.

Social Media Bar

Biggboss Tamil :  பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கி நூறு நாட்களை தாண்டிய நிலையில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. போட்டியில் வெற்றியடைவார்கள் என்று நினைத்த போட்டியாளர்கள் பலரும் கூட தற்சமயம் எலிமினேஷன் ஆகியுள்ளது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. தற்சமயம் விஜய் வர்மா அர்ச்சனா மாயா மணி தினேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். 100 நாட்களை தாண்டியதை அடுத்து ஏற்கனவே போட்டியில் இருந்து விலக்கப்பட்ட போட்டியாளர்கள் தற்சமயம் சிறப்பு விருந்தினர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் குறைந்த அளவிலான நபர்கள் விளையாட்டை விளையாடுவது மக்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தாது என்பதற்காக கூடுதல் ஆட்களுக்காக இந்த விருந்தினர் கூட்டம் ஒவ்வொரு வாரமும் வந்து கொண்டிருக்கிறது.

biggboss tamil
biggboss tamil

இந்த நிலையில் மிட் எவிக்சன் என்னும் வாரத்திற்கு நடுவில் ஏற்படும் எவிக்சன் இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இன்னும் பத்து நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியவே இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பிக் பாஸ் வைத்த டாஸ்க் தான் மிகவும் சுவாரஸ்யமானது.

போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு கதவுகளுக்கு அருகில் நிற்க வேண்டும் பிக் பாஸ் சொல்லும் பொழுது அவர்கள் கதவை திறக்க வேண்டும். அப்பொழுது யாருக்கு கதவு திறக்கவில்லையோ அவர்கள்தான் போட்டியிலிருந்து எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

அர்ச்சனாவுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் அவர் எலிமினேஷன் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது ஆனால் இந்த எலிமினேஷனில் நீக்கப்பட்டது விஜய் வர்மா தான் என்பது ரசிகர்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

To Top