News
இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்!.. கோட் மூன்றாம் சிங்கிளை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்!.
தற்பொழுது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் விஜய்க்கு இது கடைசி படம் என்றும் பலரும் தெரிவித்து வரும் நிலையில் இந்த படத்தின் மற்றொரு அப்டேட் வெளியாகி இருந்தது.
மேலும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளி வராது எனவும் தகவல் வெளிவந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி குறித்த நேரத்தில் படம் வெளிவரும் என்றும், ஆகஸ்ட் மாதம் படத்தை பற்றிய மற்றொரு அப்டேட் ஒன்று வெளிவரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் நேற்று வெளியானது. இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதி இருந்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா மற்றும் வ்ருஷா பாடியிருந்தார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியான இந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் இந்த பாடலை திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது கலாய்த்து ட்வீட் செய்து இருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
டீ ஏஜிங்
கோட் படத்தில் விஜயின் வயதை குறைத்துக் காண்பதற்காக அமெரிக்கா வரை சென்று டீ ஏஜிங் தொழில்நுட்பம் வேலை செய்து இருப்பதாக தகவல் வெளிவந்தது. மேலும் டைம் டிராவல் ஜானரில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் டீ ஏஜிங்கில் பார்ப்பதற்கு அவரின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த படத்தில் முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது. அந்த இரு பாடல்களுமே குறைந்த அளவில் வரவேற்பு பெற்றது. மேலும் பல வருடங்கள் கழித்து யுவன் சங்கர் ராஜா, விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் நன்றாக வரும் என்ற நிலையில் அந்த இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் குறைந்து வரவேற்பு தான் பெற்றது.
மேலும் மூன்றாவது சிங்கிள் வெளியிடப்பட்ட நிலையில் அந்தப் பாடலும் பெரும் அளவில் வெற்றி பெறவில்லை.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
இந்தப் பாடலில் டீ ஏஜிங் லுக்கில் விஜய் தோன்றியிருந்தார். இதனைப் பார்த்த அவரின் ரசிகர்கள் விஜயின் தோற்றம் குறித்து கவலை அடைந்தனர். தற்பொழுது விஜய் பார்ப்பதற்கு இளமையாக தான் இருக்கிறார். அவரை அவ்வாறே விட்டிருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும்.

டீ ஏஜிங் என்ற பெயரில் இவ்வாறாக்செய்துவிட்டார்கள் என பலரும் பல கமெண்ட் செய்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் ‘அப்பா.. De aging பண்ண சொன்னா.. Dolly Chai wala வை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா’ என்று கலாய்த்துள்ளார். தற்பொழுது அவரின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
