News
கோடிக்கோடியா கொட்டி கொடைக்கானலில் பங்களா! – ரத்த கண்ணீர் வடிக்கும் பாபி சிம்ஹா!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. சூது கவ்வும் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆனாலும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து பன்முகத்தன்மை கொண்ட நடிகராக உள்ளார் பாபி சிம்ஹா.
சமீபத்தில் பாபி சிம்ஹா கொடைக்கானலில் கோடி கணக்கில் செலவு செய்து பங்களா ஒன்றை கட்டி வருவதாகவும், ஆனால் அதற்கான முறையான அனுமதிகள் பெறாமல் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் தகவல் பரவியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பாபி சிம்ஹா இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் “சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நானும், என் வீட்டாரும் இந்த கொடைக்கானலில் வசித்து வருகிறோம். சிறுவயதிலிருந்து நான் இங்குதான் படித்தேன். எனது வீடு இருந்த இடத்தில்தான் புது வீடு கட்டி வருகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் இந்த வீட்டை கட்ட இதுவரை 1.70 கோடி அவர் செலவிட்டுள்ள நிலையில் கட்டிட காண்ட்ராக்டர் பணிகளை முழுவதுமாக முடிக்காமல் நிறைய குளறுபடிகள் செய்து தனது பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும் புலம்பியுள்ளார் பாபி சிம்ஹா. இதுகுறித்து அவர் சட்டநடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளதாகவும், அதேபோல அது தனது இடம்தான் என்பதற்கான அனைத்து சான்றுகளும், ஆவணங்களும் தன்னிடம் உள்ளதாகவும் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
