News
தனியா விமானம் வாங்குன பிரபலங்களை பார்த்திருப்பீங்க.. ஆனா தனியா தீவு வாங்குன பிரபலம்.. யார் தெரியுமா?
தற்போது சினிமாவில் நடிக்கும் பல நடிகர், நடிகைகளும் சொகுசு கார் வாங்குவது, சொந்த பங்களா கட்டுவது போன்ற ஆடம்பர பொருள்களை வாங்கி அதை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள்.
முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் இவ்வாறு செய்து கொண்டிருக்கும் நிலையில் சின்னத்திரையில் நடிப்பவர்கள், விளம்பரம் படங்களில் நடிப்பவர்கள் போன்ற பல நடிகர், நடிகைகளும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி அவ்வப்போது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருவார்கள்.
அந்த வகையில் சினிமா நடிகை ஒருவர் தற்போது தனக்கென ஒரு சொந்த தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் யார் அந்த நடிகை என்பதை பற்றி பார்க்கலாம்.
பாலிவுட்டில் பிரபல நடிகை
பாலிவுட்டில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இலங்கை நடிகர் ஆவார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர், பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களில் தோன்றுவதை தவிர இந்தி திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் பல படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆரம்பத்தில் இவர் இலங்கையில் தொலைக்காட்சி நிருபராக பணியாற்றினார். அதன் பிறகு மாடலிங் துறையில் இணைந்தார். கடந்த 26 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா என்ற பட்டத்தை வென்றார்.

இவர் கடந்த 2011 இல் வெளியான மர்டர் 2 என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவரின் திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு ஹவுஸ்புல் 2 என்ற திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது, பிறகு ரேஸ் 2 கடந்த 2013இல் வெளிவந்த போது இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கிக் என்ற திரைப்படம் அதிக வசூல் சாதனை புரிந்தது. மேலும் அந்த படத்தில் இவர் நடித்ததற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். இவ்வாறு பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பல விருதுகளை வாங்கிய ஜாக்லின் பெர்னாண்டஸ் விளம்பர படங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அதிக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
தனித்தீவு வாங்கிய ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பாலிவுட் மட்டுமில்லாமல் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் தன்னுடைய காலடி பதித்திருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும், ஜாக்குலின் பெர்னாண்டஸ் பல படங்களின் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் பணியாற்றி வரும் இவர், சுமார் 600 ஆயிரம் டாலர்களை செலவு செய்து தனியாக ஒரு தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

தற்போது அந்த தீவில் ஆடம்பர பங்களா ஒன்று கட்ட திட்டமிட்டு இருப்பதாகவும், தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
