உங்கிட்ட சிக்கிக்கிட்டு அரசியல் பாவம் தம்பி… விஜய்யை நக்கல் செய்த இயக்குனர் போஸ் வெங்கட்..!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பெரும் சாதனைகள் படைத்துவிட்டு தற்சமயம் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் என்பது அதிகமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று தன்னுடைய முதல் மாநாட்டை நடத்தினார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்.
இந்த மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. எதிர்பார்த்ததை விடவும் அதிக தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தனர். விஜய் வந்து வழக்கம் போல பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் சற்று எதிர்பாராத வகையில் விஜய் சிறப்பாக பேசியிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

எதிர்மறையான விமர்சனம்:
விஜய் எப்படி செயல்பட போகிறார் என்பதற்கு ஒரு உதாரணமாக அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. இந்த நிலையில் அவர் மாநாட்டை தொடர்ந்து அவருக்கு ஆதரவுகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு நடுவே சினிமா பிரபலங்கள் பலரும் விஜயை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வந்தனர். ஆனால் சினிமாவிலும் சின்னத்திரையிலும் வெகு காலங்களாக நடித்து வரும் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் விஜய் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது பதிவில் யப்பா உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல். பள்ளிகூட ஒப்பிப்பு. சினிமா நடிப்பு மற்றும் அதீத ஞாபக சக்தி எழுதி கொடுத்தவ நல்ல வாசிப்பாளன்.. முடிவு? பாப்போம் என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவு தற்சமயம் வைரலாகி வருகிறது.