குழந்தை ரூபத்தில் ஒரு பூதம் – ஹாலிவுட்டில் வெளியாக இருக்கும் கேஸ்பர்

புகழ்பெற்ற காஸ்பர் தொடர் மறு ஆக்கம் செய்யப்பட உள்ளது.

1995 இல் கார்ட்டூனாக வெளி வந்து மக்களிடையே மிகவும் பிரபலமாகிய ஒரு கதாபாத்திரம்தான் கேஸ்பர். கேஸ்பர் என்பது ஒரு சிறுவனின் ஆவி ஆகும். அமானுஷ்யமாக பேய்களை காட்டுவதற்கு மாறாக கேஸ்பரை மக்களுக்கு நல்லது செய்யும் அழகான ஆவியாக காட்டியிருப்பார்கள்.

இதனால் குழந்தைகள் பலருக்கும் பிடித்த கதாபாத்திரமாக கேஸ்பர் ஆனது. பிறகு கேஸ்பரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நிறைய கார்ட்டூன் தொடர்கள், காமிக்ஸ்கள் வந்தன.

Casper Movie Poster
Social Media Bar

தற்சமயம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கேஸ்பர் கதாபாத்திரத்தை கொண்டு ஒரு புது வெப் சீரிஸ் எடுக்க உள்ளது. இதுவரை வந்த கேஸ்பர் சீரிஸ்கள் கார்ட்டூனாக மட்டுமே வந்தன. ஆனால் தற்சமயம் வரவிருக்கும் கேஸ்பர் தொடர் லைவ் ஆக்‌ஷனாக வரவிருக்கிறது.

இந்த சீரிஸ் நகைச்சுவையாகவும் அதே சமயம் ஹாரராகவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெட்ப்ளிக்ஸில் ஹானிபல் மற்றும் ஃப்ளாஸ் போன்ற தொடர்களை எழுதிய Kai yu Wuதான் இந்த கதையையும் எழுதியுள்ளார். எனவே பழைய கேஸ்பர் ரசிகர்கள் இந்த சீரிஸிற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.