Category Archives: Cinema History

Tamil cinema history, classic movies, legendary actors, Kollywood history,classic Tamil movies,film industry history,

விஜயகாந்தை நல்லவர்னு சொல்றீங்களே.. அவரை விட நல்லவர் ஒருத்தர் இருக்கார்.. ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் விஜயகாந்த் ஒருவர்.

விஜயகாந்த் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட ரொம்பவும் எளிமையான ஒரு மனிதர். தன்னுடைய வாழ்நாளில் கடைசி வரை ஸ்டார் ஹோட்டலிலேயே தங்காத ஒரு தமிழ் சினிமா பிரபலம் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான்.

அதேபோல அதிக விலை உயர்ந்த ஆடைகளை விஜயகாந்த் அணிய மாட்டார் சாதாரண வேட்டி சட்டைகளை மட்டுமே வாங்கி அணிந்து கொள்வார். மற்ற நடிகர்களை போல பெரும் நிறுவனத்தின் ஆடைகள் மீது ஆசை கொள்ள மாட்டார் விஜயகாந்த்.

விஜயகாந்த்:

இப்படி எளிமையாக வாழ்ந்தவர் என்றாலும் செலவு செய்வதை பொருத்தவரை விஜயகாந்த் மற்றவர்களுக்கு அதிகமாக செலவு செய்யக்கூடியவர். உதாரணத்திற்கு சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே அவரது அலுவலகத்தில் பல நடிகர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் உணவளித்திருக்கிறார் விஜயகாந்த்.

இப்போது வரை அதை நிறைய இயக்குனர்கள் நினைவு கூறுவதை பார்க்க முடிகிறது. இதனாலேயே எப்பொழுது போற்றப்படும் ஒரு நபராக விஜயகாந்த் இருந்து வருகிறார். இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் தனது பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் பெரிதும் போற்றப்படும் நபராக விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் விஜயகாந்த்தை விட ஒரு நல்ல மனிதன் தமிழ் சினிமாவில் இருக்கிறார் அவர் வேறு யாரும் இல்லை நடிகர் பிரபு தான் என்று கூறுகிறார் மாணிக்கம் நாராயணன்.

நடிகர் பிரபு:

பிரபு நடிகர் அஜித்தை வைத்து ஆசல் என்ற படத்தை தயாரித்தார் அந்த திரைப்படத்தை சிவாஜி பிராடெக்சன் என்னும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். ஆனால் அந்த படம் ஓடாததால் பெரிதாக பண இழப்பை சந்தித்தார் பிரபு.

அதற்கு பிறகு சிவாஜி புரொடக்ஷனுக்காக ரஜினி சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து கொடுத்தார். ஆனால் அஜித் திரும்ப கைமாறாக எந்த ஒரு திரைப்படத்திலும் அவருக்கு நடித்து கொடுக்கவில்லை இருந்தாலும் கூட பிரபு அதை ஒரு பெரிய விஷயமாக கண்டு கொள்ளவில்லை. பிரபு மாதிரி ஒரு நபரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது என்று கூறுகிறார் மாணிக்கம் நாராயணன்.

சிவாஜியை ஏன் தாக்கி பேசுனீங்க.. நிரூபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதில்…

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில்தான் ரசிகர்கள் தனியாக பிரிந்து அவர்களுடைய நடிகர்களுக்காக சண்டையை போட துவங்கியிருந்தனர்.

அப்பொழுது எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வந்தது. இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் பழக்கம் அப்போதைய சமயத்தில் தான் உண்டானது.

இதனால் எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்களுக்கு இடையே எப்போதும் தள்ளுமுள்ளு இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் எம்ஜிஆரிடம் நேர்காணலில் பேசிய ஒரு பத்திரிகையாளர் அப்போது கேட்ட கேள்விகளும் அதற்கு எம்ஜிஆர் பதில்களும் கொஞ்சம் பிரபலமானவையாக இருக்கின்றது.

நிரூபர் கேட்ட கேள்வி:

sivaji-ganesan

அப்படியாக ஒரு கேள்வி கேட்கும் பொழுது  சிவாஜி குறித்து எம்ஜிஆர் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் குறித்து தான் எம்ஜிஆரிடம் கேள்விகளை கேட்டார் அந்த நிருபர்.

ஏனெனில் எம்ஜிஆர் ஒரு மேடை பேச்சில் பேசும்பொழுது இனி மிகையான நடிப்புகளுக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இருக்காது இயற்கையான நடிப்புக்கு தான் வரவேற்பு இருக்கும் என்று கூறியிருந்தார்.

அது சிவாஜியை வைத்துதான் அவர் கூறுகிறார் என்று அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தது  இது குறித்து எம்ஜிஆரிடம் கேட்ட பத்திரிகையாளர்கள் இயற்கையான நடிப்புக்கு தான் எதிர்காலத்தில் வாழவேற்பு இருக்கும் என்று கூறினீர்களே அது சிவாஜியை குறிப்பிட்டா என்று கேட்டனர்.

எம்.ஜி.ஆர் பதில்:

அதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர் நான் அப்படிச் சொன்னால் அது சிவாஜியைதான் தாக்கி பேசியதாக அர்த்தமா என்று கேட்டிருந்தார் எம்ஜிஆர்.

mgr

பிறகு நிரூபரிடம் சிவாஜி மிகையாக நடிக்கிறதா நீங்க நினைக்கிறீர்களா இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டு சிவாஜியின் நடிப்புக்கு கலங்கம் விளைவிக்காதீர்கள் என்று பதில் அளித்து இருந்தார்.

பிறகு இன்னொரு நிருபர் எம்ஜிஆரிடம் கேட்கும் பொழுது ஒரு நடிகையை நீங்கள் ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவரை எந்த கதாநாயகனுடனும் சேர்ந்து நடிக்க கூடாது என்று நிபந்தனை விதித்ததாக கூறுகிறார்கள் என்று கேட்டார.

அதற்கு பதில் அளித்த எம்ஜிஆர் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள் மஞ்சுளா என்று நேரடியாக கேளுங்கள். அவர் மற்ற நடிகரோடு நடிக்கலாம் என்றுதான் நான் அவரை ஊக்குவித்து இருக்கிறேன். என்னிடத்தில் பயிற்சி பெற்ற நடிகை வேறு நடிகர்களுடன் நடித்தால் அது எனக்கு பெருமை தான் என்று கூறி இருந்தார் எம்ஜிஆர். இந்த பேட்டி குறித்த தகவலை பிரபல சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு சம்பவம் செய்த இளையராஜா.. அவரால் மட்டும்தான் அதை செய்ய முடியும்!.

தமிழ் இசையமைப்பாளர்களில் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன.

இதனாலேயே இளையராஜா இசையமைப்பது என்பது திரைப்படங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான விஷயமாக பார்க்கப்பட்டது. பல முன்னணி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் வீட்டை நாடினர். இந்த நிலையில் இளையராஜாவிற்கும் வேலைபளு அதிகரித்தது.

வரிசையாக வாய்ப்பு:

நிறைய திரைப்படங்களுக்கு வரிசையாக அவர் இசையமைத்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இயக்குனர் நந்தகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ilayaraja

செந்தமிழ்பாட்டு என்கிற திரைப்படத்தில் நான் பணிப்புரிந்து கொண்டிருந்தப்போது அந்த திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் படம் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை அறிந்த இளையராஜா தேவர் மகன் திரைப்படத்திற்கு இசையமைக்க சென்றுவிட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் செந்தமிழ்பாட்டு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டனர். எனவே ரீ ரெக்கார்டிங்கிற்காக இளையராஜாவை நாடியப்போது அவர் ஏற்கனவே தேவர் மகன் பட வேலையை துவங்கியிருந்தார்.

இரண்டு படம்:

ilayaraja

அதே சமயம் இவர்களையும் அப்படியே அனுப்ப முடியாது என யோசித்த இளையராஜா பிரசாத் லேபில் எங்கள் படத்திற்கும், ஏ.வி.எம் மில் தேவர் மகன் படத்திற்கும் மாறி மாறி ரீ ரெக்கார்டிங் வேலைகளை பார்த்தார். இளையராஜாவை தவிர வேறு யாராலும் அதை செய்ய முடியாது.

இத்தனைக்கும் இரண்டு படத்திற்கும் வேறு வேறு மாதிரியான இசையை கொடுத்திருந்தார் இளையராஜா என்று அந்த விஷயத்தை விளக்கியுள்ளார் நந்தக்குமார்.

இதுக்கூட பண்ண முடியல… நீயெல்லாம் ஒரு கவிஞனா?.. எகத்தாளமாய் பேசிய எம்.எஸ்.வி.. கண்ணதாசன் செய்த சம்பவம்..!

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த இசை கலைஞர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.வி. தமிழில் எம் எஸ் வி நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இளையராஜாவிற்கு முன்பு வரை எம்.எஸ்.வி இசைக்குதான் அதிக வரவேற்பு இருந்தது.

இதனால் திரைத்துறையில் இருக்கும் பெரும் நடிகர்களே எம்.எஸ்.வியின் இசையில் தங்களுக்கு பாடல்கள் வேண்டும் என்று நினைத்தனர். இந்த நிலையில் எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது.

கண்ணதாசனின் பழக்கம்:

கண்ணதாசனை பொருத்தவரை அவரை மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும் அவரிடம் ஒரு சில வார்த்தைகள் யாரேனும் தவறாக பேசிவிட்டால் கூட அந்த படத்திற்கு  பாடல் வரிகள் எழுதாமல் சென்று விடக் கூடியவர் கண்ணதாசன்.

MSV

இப்படி இருக்கும் பொழுது எம்.எஸ்.வி அவரை மோசமாக திட்டிய சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ஒரு பாடலுக்கான இசையை எம்.எஸ்.வி எழுதிய பிறகு அந்த பாடலில் வரும் வார்த்தைகள் லா என்ற எழுத்தில் முடிய வேண்டும் என்பது எம்.எஸ்.வியின் ஆசையாக இருந்தது..

அதை கண்ணதாசனிடம் கூறினார். அதற்கு கோபமடைந்த கண்ணதாசன் அது எப்படி லா என்று முடியும் பாடல் வரிகளையே வரிசையாக எழுத முடியும் என்று கூறி சத்தம் போட்டு உள்ளார்.

சத்தம் போட்ட எம்.எஸ்.வி:

இது எம்.எஸ்.விக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது உடனே நீ இவ்வளவு பெரிய கவிஞன் என்று கூறிக் கொள்கிறாய் இந்த மாதிரி ஒரு பாட்டை உன்னால் போட முடியாதா என்று கேட்டுவிட்டார் எம் எஸ் வி.

kannadasan

இது கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை தொடர்ந்து அவர் அப்படியான ஒரு பாடலை பிறகு எழுதி கொடுத்து விட்டார். இருந்தாலும் எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் அதற்கு பிறகு பெரிதாக சண்டைகள் ஏற்பட்டதில்லை.

அவர்கள் நண்பர்கள் என்பதால் அப்போது ஏற்படும் சண்டைகள் எல்லாம் அப்பொழுதே முடித்து விடும் இந்த விஷயத்தை எம்.எஸ்.வி. ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

ஒரே ஒரு தவறான முடிவு… வீட்டை விற்கும் நிலைக்கு வந்த ரம்பா.. ஜோதிகாவும் இதற்கு காரணமா?..பின்னணி என்ன?

ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்பா. பாலிவுட்டில் பெரிய கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் ரம்பாவின் ஆசையாக இருந்தது.

ஆனால் பாலிவுட்டில் அப்பொழுது போட்டிகள் அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து கன்னடம், போஜ்புரி என்று பல மொழிகளில் நடித்து வந்தார் ரம்பா. இந்த நிலையில்தான் தமிழில் உழவன் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

1993 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான உழவன் திரைப்படம் பெரும் நஷ்டத்தை கண்டது. அதனை தொடர்ந்து ராசி இல்லாத நடிகை என்று கூறி ரம்பாவிற்கு வாய்ப்பு தருவதை நிறுத்தி வைத்தனர்.

தமிழில் அறிமுகம்:

இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சியிடம் வாய்ப்பை பெற்று 1996 இல் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் நடித்தார் ரம்பா. அந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து ரம்பா தமிழ் சினிமாவில் வெற்றி நடிகையாக மாறினார்.

அதனை தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா என்று நிறைய திரைப்படங்களில் ரம்பா நடித்திருந்தார் ரஜினியுடன் சேர்ந்து அருணாச்சலம் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். பெரும் பிரபலங்களுடன் தொடர்ந்து நடித்து வந்த போதும் கூட ரம்பாவிற்கு இடையில் வந்த ஒரு விபரீத ஆசை அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

திரைப்படம் தயாரித்து வழங்கலாம் என்பது ரம்பாவின் அப்பொழுதைய ஆசையாக இருந்தது. எனவே வைத்திருந்த பணத்தை வைத்து த்ரீ ரோசஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை தயாரிப்பு செலவுகள் அதிகமானது.

ரம்பாவிற்கு வந்த கடன்:

ஏனெனில் திரைப்படத்தில் ஜோதிகா மாதிரியான முன்னணி நடிகைகளையும் இவர் நடிக்க வைத்தார். அதனை தொடர்ந்து சம்பளத்திற்காக கடன் வாங்கி படத்தை தயாரித்தார். அதிக கவர்ச்சியுடன் எடுக்கப்பட்டாலும் கூட அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.

அதனை தொடர்ந்து பெரும் கடன் சுமையில் மாட்டிக் கொண்டார் ரம்பா. இந்த கடன் சுமையை குறைப்பதற்காக பட வாய்ப்புகளை தேடி சென்ற பொழுது பட வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன. மேலும் நடிகைகளுக்கான சம்பளமும் அப்போது மிகவும் குறைவுதான்.

எனவே மவுண்ட் ரோட்டில் இருக்கும் தனது வீட்டை விற்று பாதி கடனை அடைந்தார். அதற்கு மேலும் கடன் இருந்த காரணத்தினால் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து மீதி கடனை அடைத்தார் ரம்பா.

தற்சமயம் அந்த தொழிலதிபருடன் கனடாவில் வசித்து வரும் ரம்பா திரும்ப சினிமாவில் நடிக்கவே இல்லை அவர் தயாரித்த ஒரு திரைப்படமே அவரது சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

தொடர்ந்து மூணு தடவை.. நடிகர்களால் நாசமான நடிகை ஸ்ரீ வித்யாவின் வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் அதிகமான பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. ஸ்ரீவித்யா நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆரம்பகால கட்டங்களில் சினிமாவிற்கு வந்த போது ஸ்ரீவித்யா நடிகர் கமலஹாசன் மீது காதல் கொண்டார். இந்த விஷயத்தை கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஸ்ரீவித்யாவும் கூட ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல காதல் இருந்து வந்தது. கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஸ்ரீவித்யாவின் வீட்டில் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது.

காதல் பிரிவு:

இதனை தொடர்ந்து ஸ்ரீ வித்யாவை விட்டு பிரிந்தார் கமலஹாசன். இது ஸ்ரீ வித்யாவிற்கு மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் கூட அதையெல்லாம் மறைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் ஸ்ரீ வித்யா.

அதற்குப் பிறகு ஜார்ஜ் என்கிற சினிமா துறையை சேர்ந்த நபரின் மீது காதல் கொண்டார் ஸ்ரீ வித்யா. பிறகு அவருக்காக கிறிஸ்துவத்திற்கும் மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் எல்லாம் ஸ்ரீ வித்யாவிற்கு ஆசை இல்லை.

திருமணம் செய்து கொண்டு அவரது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் ஸ்ரீ வித்யாவின் ஆசையாக இருந்தது.

கொடுமையான திருமண வாழ்க்கை:

ஆனால் அவரது வாழ்க்கையை அதற்கு மாறாக அமைந்தது ஜார்ஜ் ஸ்ரீவித்யாவை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க நினைத்தார். எனவே தொடர்ந்து அவரை திரைப்படங்களில் நடிக்க வைத்துக் கொண்டே இருந்தார் ஜார்ஜ்.

இதற்கு நடுவே கர்ப்பமான போதெல்லாம் அவரது குழந்தையை களைத்திருக்கிறார் ஜார்ஜ். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை இப்படி கலைத்திருக்கிறார் ஜார்ஜ். இதனால் ஒவ்வொரு முறை குழந்தை களைக்கும்போதும் அந்த மருத்துவமனையிலேயே கதறி அழுவார் ஸ்ரீவித்யா என்று கூறுகிறார் ஸ்ரீவித்யாவின் அண்ணி.

இப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு உள்ளாகி கடைசியில் அமைதியான ஒரு குடும்ப வாழ்க்கை என்கிற தனது கனவுக உடைந்ததை அறிந்த ஸ்ரீவித்யா கணவனிடம் இருந்து தனது சொத்துக்களையாவது பறிமுதல் செய்ய வேண்டும் என்று விவாகரத்து வாங்கினார்.

அதன் பிறகு உடல் சீர்கெட்டு புற்றுநோய்க்கு உள்ளான ஸ்ரீவித்யா மோசமான நிலையில் தான் மரணம் அடைந்தார். அப்போது சொத்துக்களை ஆதரவற்றவர்களுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் எழுதி வைத்துவிட்டு இறந்தார் ஸ்ரீவித்யா என்று கூறுகிறார் அவரது அன்னி.

20 வருஷம் முன்னாடியே அதை செஞ்சுருப்பேன்.. விஜய் அரசியலுக்கு வர்றதுக்கு முக்கிய காரணமே இதுதான்..! ஆளுங்கட்சியை சாடிய தளபதி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றதுமே அவரை மாஸ் ஹீரோவாக பார்த்து வந்த ரசிகர்கள் தற்சமயம் அவரை தலைவராக பார்க்க துவங்கியுள்ளனர். விஜய்க்கு வெகு காலங்களாகவே அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது.

அதனை தொடர்ந்துதான் தற்சமயம் அரசியல் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். திரைத்துறையினரை பொறுத்தவரை அவரது அரசியல் நுழைவுக்கு பலரும் விருப்பம் தெரிவித்தே வருகின்றனர். ஆனால் அதற்காக சினிமாவை விட்டு சென்றிருக்க வேண்டாம் என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது.

விஜய் அரசியல்:

ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் அரசியல் பேசி இருக்கிறார் விஜய். அதற்காக அவரது அலுவலகத்தில் ரெய்டு மாதிரியான விஷயங்களும் நடந்தன. திரைப்படங்களில் கொஞ்சமாக அரசியல் பேசியதற்கே இவ்வளவு பின் விளைவுகள் ஏற்படுகிறதே என அப்போதே அதுக்குறித்து யோசித்துள்ளார் விஜய்.

அதன் காரணமாகதான் அவர் அரசியலுக்குள் எண்ட்ரி ஆனார் என்று முன்பே ஒரு பேச்சு இருந்தது. அதற்கு தகுந்தாற் போலவே ஒரு விடையையும் கொடுத்துள்ளார் தளபதி. தளபதி விஜய்யிடம் ஒரு பேட்டியில் 20 வருடத்திற்கு முன்பு இருந்த விஜய்யிடம் சென்று ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என கேட்கப்பட்டது.

இதுதான் காரணம்:

vijay bussy anand

அதற்கு பதிலளித்த விஜய் அந்த விஜய்யிடம் சென்று உன் வாழ்க்கை என்னுடையதை விட நிம்மதியாக இருக்கிறது. ஏனெனில் அப்போதெல்லாம் எந்த ரெய்டும் இல்லை என வெளிப்படையாக கூறியுள்ளார் விஜய்.

விஜய் அப்படி கூறியதன் மூலமாக அரசியல் வாதிகள் கொடுத்த அழுத்தம்தான் அவரை தொடர்ந்து தற்சமயம் அரசியலுக்கு வரவழைத்துள்ளது என தெரிகிறது.

குஷ்பூ திருமணத்தில் கதறி அழுத கார்த்திக்.. இதுதான் காரணமாம்!..

80 களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவில் இருந்து வந்த குஷ்பூவிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே பெரிதாக வரவேற்புகள் கிடைக்க துவங்கியது.

முக்கியமாக அவர் நடித்த திரைப்படங்களில் சின்னதம்பி திரைப்படம் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அப்போதைய காலகட்டங்களில் இயக்குனர்களை திருமணம் செய்வது என்னும் முறையை நடிகைகள் பின்பற்றி வந்தனர்.

இயக்குனருடன் காதல்:

இயக்குனரை திருமணம் செய்து விட்டால் அதற்கு பிறகு நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பதே பெரிதாக இருக்காது. இந்த நிலையில் குஷ்பூவும் அந்த வகையில் முறைமாமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி யை காதலிக்க தொடங்கினார்.

இந்த காதல் வெகுநாட்கள் சென்ற பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் குஷ்பூ இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். குஷ்பு முதன்முதலில் சுந்தர்சியை காதலிக்கும் விஷயத்தை நடிகர் கார்த்தி இடம் தான் கூறினார்.

கதறி அழுத கார்த்திக்:

அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்து வந்தனர் அதேபோல குஷ்பூ மற்றும் சுந்தர் சி திருமணத்திற்கும் முக்கிய விருந்தாளியாக கார்த்தி வந்திருந்தார்.

அப்பொழுது சுந்தர் சியும் குஷ்பூவும் கார்த்தியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்களாம். அப்பொழுது அதனால் அதிக எமோஷனலான கார்த்திக் கண்ணீர் விட்டு அழுதாராம் இந்த நிகழ்வை குஷ்பூ ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் நடிக்கவே கூடாதுன்னு இந்த வேலைகளை பார்த்தேன்… ஓப்பன் டாக் கொடுத்த எஸ்.ஏ.சி!.

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தப்போது நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனால் அவருக்கு திரைப்படங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தது.

ஆனால் அதே சமயம் அவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதனால்தான் இத்தனை பேர் அவரை கேலி செய்து பேசியும் கூட அவர் ஒரு அடி கூட பின் வாங்கவில்லை. எல்லா காலத்திலும் கேலி செய்பவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சாதனை படைத்த விஜய்:

ஆனால் அவர்களை தாண்டி வந்து சாதனை படைப்பவர்களே விஜய் மாதிரியான பெரிய இடத்தை பிடிக்கின்றனர். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வருவதில் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு அவ்வளவாக விருப்பமில்லை.

ஆனால் விஜய் விடாபிடியாக இருந்தார். விஜய் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் அவர் இயக்கிய ஒரு படத்தில் விஜய்க்கு கதாபாத்திரம் ஒன்றை வைத்திருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

அப்பா செய்த வேலை:

அந்த காட்சியில் விஜய் இனி சினிமா பக்கம் வரவே பயப்பட வேண்டும் எனும் அளவில் பெரிய வசனம் ஒன்றை வைப்பதற்கு முடிவு செய்தார் எஸ்.ஏ சந்திரசேகர். அதில் ராதாரவி அவர் மனைவியை அடித்து கொண்டிருக்கும்போது அவரை தடுத்து விஜய் வசனம் பேச வேண்டும்.

அந்த பெரிய வசனத்தை ஒரே டேக்கில் சரியாக பேசினார் விஜய். அதை பார்த்த எஸ்.ஏ சி அவரது மனைவியிடம் வந்து இந்த படம் பெரும் வெற்றி பெறுமா தெரியவில்லை. ஆனால் உன் மகன் பெரிய இடத்தை தொடுவான் என கூறியுள்ளார். இதனை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அந்த ஒரு காரணத்துக்காக சிவாஜி படத்தையே அவாய்ட் செய்த கார்த்திக்.. வைத்து செய்த விக்ரமன்!..

 தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கார்த்திக் பெரும்பாலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

அதனால்தான் தொடர்ந்து கார்த்திக்கின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அதிகபட்சம் ஏழ்மையான கதாபாத்திரத்தில் நடிப்பது தான் கார்த்திக்கிற்கு பிடித்த விஷயமாக இருக்கும்.

ஆனால் அப்போதைய காலகட்டத்தில் கார்த்திக் குறித்து தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது என்னவென்றால் படபிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார் கார்த்திக் என்பதுதான். இப்போது எப்படி சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்று கூறப்படுகிறதோ அதே போல அப்பொழுது கார்த்திக் படப்பிடிப்பிற்கு வர மாட்டார்.

கார்த்திக்கு இருந்த பிரச்சனை:

இதனால்தான் அவர் அப்போது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான நடிகராக இருந்தது. இந்த நிலையில் அவரை வைத்து படம் இயக்கியது குறித்து இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும்போது கார்த்திக்கு வேண்டுமென்றே படப்பிடிப்புக்கு தாமதமாக வரவேண்டும் என்றெல்லாம் இஷ்டம் கிடையாது.

அதிகாலை படப்பிடிப்பிற்கு அவரால் வர முடியாது. அதுதான் அவரிடம் உள்ள பிரச்சனையே. நான் ஒரு திரைப்படம் இயக்கும்போது அதில் கார்த்திக்கை நடிக்க வைக்க கேட்டபோது அவரே என்னிடம் அதை தான் கூறினார். என்னால் 11 மணிக்கு தான் காலையில் படப்பிடிப்புக்கு வர முடியும் அதற்கு முன்னால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டார்.

இதுதான் காரணம்:

அதனை கேட்ட விக்ரமன் அப்படி என்றால் நீங்கள் வருவதற்கு முன்பு வேறு ஆட்களுக்கான காட்சிகளை நான் படமாக்கிக் கொண்டிருப்பேன் அதனால் நீங்கள் வந்தாலும் ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்துதான் நடிக்க வேண்டியிருக்கும்.

அதில் உங்களுக்கு பிரச்சனை இல்லையே என்று கேட்டிருக்கிறார் கார்த்தியும் அதற்கெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை என்று கூறியிருக்கிறார். அதே போல இரவு ஆனாலும் கூட நின்று நடுத்து கொடுப்பாராம் கார்த்திக்.

ஆனால் அதிகாலையில் மட்டும் அவரால் வந்து நடிக்க முடியாது என்று கூறப்படுகிறது இதனால் தான் கார்த்திக் பெரும்பாலும் சிவாஜி திரைப்படங்களில் கூட அதிகமாக நடிக்கவில்லை ஏனெனில் படபிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்பே வந்து அமர்ந்திருக்கக் கூடியவர் சிவாஜி கணேசன் ஆனால் தாமதமாக வருபவர் தான் கார்த்திக் என்பதால் அவர் சிவாஜி கணேசனுடன் பெரும்பாலும் நடிக்கவே இல்லை என்று கூறுகிறார்.

அந்த விஷயத்துக்காக காசு வாங்காமல் படம் நடித்து குடுத்த மம்முட்டி… அவ்வளவுக்கா காஞ்சி போய் கிடக்கு..!

மலையாள தேசத்தில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மம்முட்டி. பெரும்பாலும் நல்ல திரைகதை உள்ள திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் மம்முட்டி.

அதனால்தான் மலையாள சினிமாவில் ஒரு தனித்துவமான நடிகராக மம்மூட்டி பார்க்கப்படுகிறார். அதிக பட்ஜெட் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று விதிமுறைகளை போட்டிருப்பவர் கிடையாது மம்மூட்டி.

தேர்ந்தெடுக்கும் கதைகள்:

ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் அந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும் குறைந்த சம்பளத்திற்கு அந்த படத்தில் நடித்து கொடுக்கக் கூடியவர் சினிமாவை அப்படி ஒரு ஆர்வத்துடன் அணுகக் கூடியவர் மம்முட்டி.

தமிழில் நிறைய திரைப்படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார். அப்படி அவர் தமிழில் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களாக இருக்கும். வெறும் சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்க மாட்டார் மம்முட்டி.

அந்த வகையில் மம்முட்டி மிகவும் விருப்பப்பட்டு நடித்த ஒரு திரைப்படம் ஆனந்தம்  இந்த திரைப்படத்தில் மம்முட்டி நடிக்க வேண்டும் என்று லிங்குசாமி கேட்க சென்ற பொழுது நடந்த விஷயங்கள் மிகவும் ஆர்வமூட்டும் வகையாக இருக்கின்றன.

மம்முட்டியிடம் சொன்ன கதை:

லிங்குசாமிக்கு முதல் திரைப்படம் ஆனந்தம் திரைப்படம்தான் கிட்டத்தட்ட இயக்குனர் விக்ரமன் பானியில் அந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் லிங்குசாமி. அதனால் அந்த திரைப்படத்தில் மூத்த அண்ணன் கேரக்டரில் மம்முட்டி நடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

எனவே மம்முட்டியிடம் நேரில் சென்று அந்த கதையை கூறினார். அந்த கதையை கேட்ட மம்முட்டி இது ஒரு சிறப்பான கதை நான் இதில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு அதேபோல சம்பளம் வாங்காமல் நடித்து முடித்திருக்கிறார்.

இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரி அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அவர் ஒரு தொகையை சம்பளமாக கொடுத்து இருக்கிறார் அந்த அளவிற்கு அப்பொழுது நல்ல கதைக்கு வறட்சி இருந்ததா என்று இது குறித்து கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.

முதலமைச்சர் செய்த துரோகம்.. கமல் செய்த டார்ச்சர்.. சின்ன வீடாக கொடூர வாழ்க்கை.. நடிகையின் மறுபக்கம்!..

சலங்கை ஒலி திரைப்படத்தில்  மாதவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை ஜெயப்பிரதா. தமிழ் சினிமாவில் சலங்கை ஒலி திரைப்படம் மூலமாக இவர் நல்ல வரவேற்பு பெற்றார் என்று தான் கூற வேண்டும்.

இருந்தாலும் கூட தொடர்ந்து பல்வேறு வகையான டார்ச்சர்கள் காரணமாக சினிமா துறையை விட்டு வெளியேறி இருக்கிறார் இவர். அப்படி என்ன டார்ச்சர் அனுபவித்தார் என பார்க்கும் பொழுது சமூகத்தில் பெரிதாக புகழப்படும் பல பிரபலங்கள் பெயர் அதில் அடிப்படுவதை பார்க்க முடிகிறது.

அரசியல் பிரமுகரால் பிரச்சனை:

அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. ஹைதராபாத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் மூலமாக நடிகை ஜெயப்பிரதாவிற்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மிகவும் அழகாக இருந்தார் ஜெயப்பிரதா. அரசியல்வாதிகளின் கண்களில் இது பட்டது தவறாக போனதாக பலர் கூறுகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பி தான் பிறகு தமிழ் சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என்று தெலுங்கில் நடித்து வந்த ஜெயப்பிரதா தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கிறார்.

ஆனால் தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் அதிகமாக இருப்பது அவருக்கு தெரியாது. இந்த நிலையில் சலங்கை ஒலி படத்தில் இவர் நடித்த பொழுதே கமலஹாசனுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்பொழுது கிசுகிசுக்கள் வெளியாகி வந்ததாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவை விட்டு விலகல்:

இதனை அடுத்து இவர் நடத்தி வந்த திரையரங்குகளில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ பணத்தை வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் இவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றம் இவருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்தது.

பல பிரபலங்களின் அட்ஜஸ்மென்ட் விஷயங்களுக்கு இவர் ஒத்துப் போகாமல் இருந்ததுதான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. தொடர்ந்து தமிழில் கமலஹாசனுடன் சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்த படங்களில் எல்லாம் நடித்து வரும் பொழுது கமல்ஹாசனுமே இவருக்கு டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவே இனி வேண்டாம் என்று முடிவு செய்த ஜெயப்பிரதா பிறகு ஹிந்தியில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

ஆனால் அங்கு ஏற்கனவே பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீதேவி தொடர்ந்து அவருக்கு தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று திரைத்துறையைவிட்டு வெளியேறி இருக்கிறார் ஜெயப்பிரதா தற்சமயம் வறுமையில் தான் அவர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.