Category Archives: Tamil Trailer

பிக்பாஸ் ஜனனி கதாநாயகியாக நடிக்கும் உசுரே.. திரைப்பட ட்ரைலர்..!

இயக்குனர் நவீன் டி கோபால் என்பவரது இயக்கத்தில் தற்சமயம் உருவாகியிருக்கும் திரைப்படம் உசுரே. இந்தத் திரைப்படம் அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் நடிகை ஜனனி ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக பிரபலமான இலங்கை தமிழ் பெண்ணாக இருந்தவர் நடிகை ஜனனி. அவருக்கு அதற்குப் பிறகு சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்சமயம் முழுக்க முழுக்க காதல் கதை களத்தை கொண்ட உசுரே என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல ஆல்பம் பாடல்களை வெளியிடும் டிஜே அருணாச்சலம் நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதே இந்த படத்திற்கு ஒரு நேர்மறையான விஷயமாக அமைந்திருக்கிறது. மேலும் தற்சமயம் காதல் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் இந்த திரைப்படம் ஓடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ராஜுவின் நடிப்பில்.. குடும்ப படமாக உருவான Bun Butter Jam..ட்ரைலர் வெளியானது..!

விஜய் டிவியிலிருந்து தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் நிறைய பேர் இருந்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், நடிகை மைனா என்று நிறைய பேர் விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கின்றனர். அப்படியாக தற்சமயம் ராஜூவும் தன்னுடைய முதல் திரைப்படம் மூலமாக இறங்கியிருக்கிறார்.

இவர் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் மற்றும் அவற்றில் பங்கு பெறுவது போன்ற வேலைகளை செய்து வந்து கொண்டிருந்தார் இந்த நிலையில் தற்சமயம் பன் பட்டர் ஜாம் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இது ஒரு குடும்ப படம் என்று தெரிகிறது   பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இருவரும் சேர்ந்து ஒரு திருமணத்தை நடத்துவதற்கு செய்யும் விஷயங்களாக கதைக்களம் இருக்கும் என்று தெரிகிறது. இது ஒரு காமெடி திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி உள்ளது.

Trailer: ஞாபகமறதிகாரரும்.. பண திருடனும்.. மாரீசன் ட்ரைலரில் லீக் ஆன கதை..!

நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கும் திரைப்படமாக மாரீசன் திரைப்படம் இருந்து வருகிறது. ஏற்கனவே மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் சதீஷ் சங்கர் என்பவர் இயக்கத்தில் மாரீசன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி வடிவேலு ஞாபகம் ம்றதி நோய் கொண்ட ஒரு நபராக இருக்கிறார்.

பகத்பாசில் கதாபாத்திரம் திருடன் கதாபாத்திரம் ஆக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக பணம் வைத்திருக்கும் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடுவதற்காக திருவண்ணாமலைக்கு அவரை தன்னுடைய இருசக்கர வாகனத்திலேயே அழைத்துச் செல்கிறார் பகத் பாசில்.

இதற்கு நடுவில் எப்படி அவர் பணத்தை திருடினார் என்பதுதான் கதையாக இருக்கிறது. ஆனால் டிரைலரை பார்த்தவரை திருடுவதற்கு முன்பே வடிவேலுவுடன் ஒரு நல்ல உறவு உருவாக்குகிறது.

இதனை தொடர்ந்து அவர் திருடாமல் தன்னுடைய நண்பனாக வடிவேலுவை பார்க்க துவங்குகிறார் என தெரிகிறது. வடிவேலுவும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய ஏடிஎம் பாஸ்வேர்டை கூட மறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து அவராலேயே பணம் எடுக்க முடியாது என்கிற நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு எப்படி செல்கிறது என்பதாக தான் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

பணத்தை தேடி போய் சாத்தானிடம் சிக்கும் கும்பல்.. ஜென்ம நட்சத்திரம் ட்ரைலர்..!

தொடர்ந்து பேய் படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே வருடத்தில் ஒரு ஐந்து முதல் ஆறு பேய் படங்கள் என்று வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பி மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். ஏற்கனவே ஜென்ம நட்சத்திரம் என்கிற பெயரில் முன்பு ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.

சாத்தானுக்கு பிறக்கும் குழந்தையை அடிப்படையாகக் கொண்டு அதன் கதை செல்லும். ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சாத்தானை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது.

கோடிக்கணக்கான பணம் ஒரு இடத்தில் இருப்பதாக அறிந்து கதாநாயகனும் அவனுடைய நண்பர்களும் அந்த இடத்திற்கு செல்கின்றனர் ஆனால் சாத்தானுக்கு பூஜை செய்யப்பட்ட ஒரு இடமாக அது இருக்கிறது.

அங்கு சாத்தானிடம் சேர்க்கும் இந்த கதாநாயகன் எப்படி வெளியேறுகிறார் என்பதாக பணத்தின் கதை இருக்கிறது வருகிற 18 ஜூலை இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து சிக்கலில் சிக்கும் ஜோடிகள்.. ஹாலிவுட் தரத்தில் இறங்கிய கலையரசன்..  Trending Tamil movie Official Trailer 

பொதுவாகவே நடிகர் கலையரசனுக்கு எல்லா திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தான் வாய்ப்புகள் கிடைக்கும்.

கதாநாயகனாக வேண்டும் என்று கலையரசன் ஆசைப்பட்டு வந்தாலும் கூட ஒரு கமர்சியல் கதாநாயகர்கள் போல எந்த ஒரு வெற்றியும் இதுவரை அவரது திரைப்படங்கள் கொடுக்கவில்லை.

பெரும்பாலும் நிறைய திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களாக நடிக்கும் பொழுது அவருக்கு இறக்கும் காட்சிகள் வைக்கப்படுவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் டிரெண்டிங். இந்த திரைப்படமும் ஒரு மாஸ் கதாநாயகனுக்கான கதைக்களம் கிடையாது என்றாலும் கூட இது வரவேற்பைப் பெரும் ஒரு கதைகளமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இப்பொழுது சமூக வலைதளங்களில் கப்புல் விளாக் என்று கூறப்படும் ஜோடிகளின் வீடியோக்கள் அதிகமாக வர துவங்கியிருக்கின்றன. திருமணம் ஆன தம்பதிகள் தொடர்ந்து அவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை கூட யூடியூப் வீடியோக்களாக எடுத்து வெளியிடுவதை ஒரு விஷயமாக கொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் நிறைய சம்பாதிக்கவும் முடிகிறது. இந்த நிலையில் அப்படியான ஒரு முறையில் கலையரசனும் அவருடைய மனைவியும் பணம் ஈட்டுகின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் ஒரு சிக்கலில் சிக்குகின்றனர்.

அதனை வைத்து கதை செல்கிறது இந்த திரைப்படத்தில் சமூக வலைதளங்களின் மேல் ஏற்படும் மோகம் மற்றும் சொந்த விஷயங்களை வெளியில் இப்படி வீடியோவாக காட்டுவது எவ்வளவு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் போன்ற பாதிப்புகளை படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டிற்கு இணையான நரசிம்ம அவதார திரைப்படம்.. கே.ஜி.எஃப் நிறுவனம் செய்த சம்பவம்.. Mahavatar Narsimha Official Tamil Trailer.!

கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிறைய புராண கதைகளை படமாக்குவதன் மீது இப்பொழுது கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கடவுள் தொடர்பான திரைப்படங்களை எடுப்பதன் மீது ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது.

அந்த வகையில் ஏற்கனவே காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு நடுவே ரிசப் ஷெட்டி நடிப்பில் ஜெய் ஹனுமான் என்கிற ஒரு திரைப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம்.

இந்த நிலையில் மகா அவதார் நரசிம்மா என்கிற ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது ஹம்பாளே பிலிம்ஸ். இந்த திரைப்படத்தை அஸ்வின் குமார் இயக்குகிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

முழுக்க முழுக்க இந்த திரைப்படம் அனிமேஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவை பொறுத்தவரை அனிமேஷன் திரைப்படங்கள் அவ்வளவு திருப்திகரமான தரத்தில் இதுவரை வெளியானது இல்லை.

இந்த நிலையில் அதிக பொருள் செலவில் ஹாலிவுட்டிற்க்கு இணையான தரத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷ்ணு கடவுளின் பத்து அவதாரங்களையும் படமாக எடுக்க இருக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகியிருக்கிறது பிரகலாதன் வரைக்கும் எல்லாருடைய கதாபாத்திரமும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது படத்தில் வசனங்களும் கூட சிறப்பாக அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

 

 

நோட்ல வரைஞ்சது எல்லாம் நெசமா வருதே.. ஹாலிவுட்டில் வெளிவரும் Sketch Movie

பேண்டஸி படங்களை பொருத்தவரை இந்திய சினிமாவை விடவும் ஹாலிவுட்ல அதற்கு அதிக வரவேற்பு உண்டு. எப்போதுமே மாயாஜால கதைகள் மீது அவர்களுக்கு அதிக ஈர்ப்பு உண்டு என்று கூறலாம்.

அதனால் தான் தொன்று தொட்டு எப்பொழுதுமே ஆங்கில நாவல்கள் பிரபலமான நாவல்களாக மாயாஜால நாவல்கள் இருப்பதை பார்க்க முடியும். ஹாரி பாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ் மாதிரியான கதைகள் எல்லாமே இந்த மாதிரியான கதை அம்சத்தை கொண்ட கதைகள் தான்.

இந்த நிலையில் அடுத்து ஸ்கெட்ச் என்கிற ஒரு திரைப்படம் ஹாலிவுட்டில் வர இருக்கிறது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒரு மாயாஜால படமாக இது அமைந்திருக்கிறது. சிறுமி ஒருவர் எப்பொழுதும் படம் வரைவதை வேலையாக கொண்டிருக்கிறார்.

மிக அழகாக எல்லாம் அவருக்கு படம் வரைய தெரியாது ஆனால் வரைந்து கொண்டே இருப்பார். அப்படியாக அவர் வரையும் படங்கள் ஒரு நோட்டு புத்தகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் காட்டில் இருக்கும் ஒரு ஏரியில் அந்த நோட்டு புத்தகத்தை அவர் தூக்கி வீசுகிறார்.

அதற்கு பிறகு அந்த நோட்டு புத்தகத்தில் அவர் வரைந்த உருவங்கள் எல்லாமே நிஜமாக கண்முன் வந்து நிற்கின்றன. அவற்றில் சில மோசமானவையாகவும் இருக்கின்றன. இந்த நிலையில் இவற்றையெல்லாம் எப்படி எதிர்க்கப் போகிறார் அந்த சிறுமி என்பதாக கதை செல்கிறது இதன் ட்ரெய்லரே அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் இதனை தொடர்ந்து வரவேற்பை பெற துவங்கி இருக்கிறது.

 

காட்டுக்குள் காணாமல் போய் பிரதேமாக கிடைக்கும் பெண்.. அமானுஷ்ய சக்தியின் வேலையா..  Revenant எழுத்தாளரின் அடுத்த கதை UNTAMED Netflix trailer

அமெரிக்காவில் பெரும் வெற்றியை கொடுத்த Revenant  மற்றும் american primival போன்ற படங்கள் மற்றும் தொடர்களுக்கு கதைகளை எழுதிய எழுத்தாளர் Mark L Smith கைவண்ணத்தில் அடுத்து உருவாகி இருக்கும் சீரியஸ் தான் UNTAMED என்கிற இந்த சீரிஸ்.

இது ஒரு மர்மமான தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது காட்டுக்குள் இருக்கும் ஒரு பெண் திடீரென காணாமல் போகிறார்.

அவர் எப்படி காணாமல் போனார் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்து கிடக்கிறார். இந்த நிலையில் அந்த காட்டில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று கதை சொல்கிறது.

அது கொலைகாரர்களின் வேலையா அல்லது அந்த காட்டுக்குள் ஏதேனும் அமானுஷ்ய சக்தி இருக்கிறதா என்னும் பாணியில் இந்த கதை சொல்கிறது இதன் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

OTT Review: ஆஸ்கர் இயக்குனரின் கை வண்ணத்தில்.. இறப்பில்லாத மனிதன்..! Frankenstein | Guillermo del Toro Netflix Series..

எப்பொழுதுமே மர்ம நாவல்கள் என்பது ஆங்கிலேய மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாகும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் மர்மம் மற்றும் துப்பறிப்பது தொடர்பாக நாவல்கள் வருவது கிடையாது. ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களில் தொடர்ந்து அதிக பிரபலமாக இந்த மாதிரி நாவல்கள் தான் இருந்திருக்கின்றன.

அப்படி வெகு காலங்களாக பிரபலமாக இருந்த ஒரு கதைதான் பிராங்கன்ஸ்டைன். இறந்த மனிதனின் உடல்களை தைத்து அதற்கு உயிர் கொடுக்கும் ஒரு விஞ்ஞானி.

அதனை தொடர்ந்து அந்த உயிர் பெற்ற பிராங்கன்ஸ்டைன் என்கிற மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதாக கதை இருக்கும். தமிழில் கூட இதன் அடிப்படையில் நாளைய மனிதன் என்கிற திரைப்படம் வந்துள்ளது.

இந்த கதையை பலமுறை ஹாலிவுட்டில் படமாக்கிய பிறகு கூட இப்பொழுது மீண்டும் அதை ஒரு வெப் சீரிஸாக எடுத்து இருக்கின்றனர். ஆனால் இது கொஞ்சம் த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் இந்த சீரியஸின் டீசரை வெளியிட்டுள்ளது ஆஸ்கார் விருது பெற்ற  Guillermo del Toro இந்த சீரிஸை இயக்குகிறார்.

 

 

 

இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான ஹீரோ.. பவண் கல்யாண் நடிக்கும் ஹர ஹர வீர மல்லு.. தமிழ் ட்ரைலர்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்து வருபவர் பவண் கல்யாண். தமிழில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு. அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் பவண் கல்யாண்.

இந்த நிலையில் பவண் கல்யாண் தற்சமயம் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஹர ஹர வீர மல்லு. முகலாயர்கள் காலக்கட்டத்தில் வட இந்தியாவில் இந்துக்களுக்கு நிறைய வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை பேசும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.

மேலும் கோஹினோர் வைரத்தை எடுக்கவும் கதாநாயகன் செல்கிறார். வரலாற்று படமாக உருவாகும் இந்த படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.

மீண்டும் இலங்கை அகதியாக சசிக்குமார்.. வெளியான Freedom பட ட்ரைலர்..!

சசிக்குமார் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு என்பது கிடைக்க துவங்கியுள்ளது. முன்பு போல் இல்லாமல் அவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இயக்குனராகதான் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிக்குமார். ஆனால் அவருக்கு நடிப்பதன் மீதும் ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அவர் நடித்த நாடோடி, சுப்புரமணியப்புரம் மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பும் கூட கிடைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இலங்கையில் அதிக பஞ்சத்தின் காரணமாக தமிழ்நாடு வரும் சசிக்குமாரின் குடும்பம் எப்படி பிழைக்கிறார்கள் என்பதாக கதை செல்லும்.

இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இப்போது அவரது நடிப்பில் அடுத்து வருகிற 10 ஆம் தேதி Freedom என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

கதைப்படி ஒரு முக்கிய பிரமுகரின் இறப்புக்கு இலங்கை அகதிகள்தான் காரணம் என முடிவு செய்து அவர்களை கைது செய்கிறது போலீஸ். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதாக கதை செல்கிறது.

துரத்தும் கொலைக்கார கும்பல்.. 30 நாள் தாக்குபிடிக்கும் நாயகன்.. The Running man.. வெளியான ட்ரைலர்.!

ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே அந்த படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது எப்போதுமே இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்காகவே தொடர்ந்து ஹாலிவுட் நிறுவனங்களே இந்திய மொழிகளில் டப்பிங் செய்து திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் அடுத்து யுனிவர்செல் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Running Man. இந்த திரைப்படத்தில் Glen Powell கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர்   Edgar Wright இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதைப்படி கதாநாயகனின் குழந்தைக்கு தீவிரமான நோய் உள்ளது. அதனை சரி செய்ய அதிக தொகை தேவைப்படுகிறது.

இந்த நிலையில்தான் கதாநாயகனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது The Running Man என்கிற நிகழ்ச்சியை ஒரு நிறுவனம் நடத்தி வருகிறது. அதன்படி நாயகன் தன்னை கொல்ல வரும் கும்பலிடம் இருந்து தப்பி ஒரு மாதம் உயிர் வாழ வேண்டும்.

அப்படி செய்தால் அவருக்கு பெரிய தொகை பரிசாக கிடைக்கும். இந்த நிலையில் கதாநாயகன் 30 நாள் எப்படி பிழைக்கிறார் என்பதாக கதை செல்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.