சன்னி லியோனோடு இணைந்து நடிக்கும் தர்ஷா ! –  படம் எப்படி இருக்க போகுதோ?

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் சினிமா நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். விஜய் டிவியில் நாடகத்தில் பங்கேற்று வந்த இவருக்கு குக்கு வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.

Social Media Bar

அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தர்ஷா மக்கள் மத்தியில் தன்னை பதியவைத்து கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து இன்ஸ்டாவில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்டு வந்தார்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தற்சமயம் ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பேயாக சன்னி லியோன் நடிக்கிறார்.

எனவே இந்த படம் ஒரு கவர்ச்சி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தர்ஷாவும் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் சப்போர்ட்டாக உள்ளது.

ஏற்கனவே இன்ஸ்டாவில் கவர்ச்சி காட்டி வரும் தர்ஷா, இந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்திருப்பாரோ? என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.