தொடர்ந்து சந்தானத்திற்கு பேய் படங்களின் மூலம் வெற்றிகள் கிடைத்து வருவதால் தொடர்ந்து பேய் படங்களாகவே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்.
இந்த திரைப்படத்தில் செல்வராகவன் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் படத்தைப் பொறுத்தவரை ஒரு மர்மமான திரையரங்கில் செல்வராகவன் பேயாக இருந்து வருகிறார். அவர் மோசமான விமர்சனங்களை அளிக்கும் திரைப்பட விமர்சனங்களை வரவைத்து அவர்களை கொலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் திரைப்பட விமர்சகராக இருக்கும் சந்தானத்திற்கும் அங்கு திரைப்படம் பார்ப்பதற்கு அழைப்பு வருகிறது. அங்கு சந்தானம் செல்லும் பொழுது அவர் ஒரு திரைப்படத்திற்கு உள்ளேயே மாட்டிக்கொள்கிறார். அந்த திரைப்படம் முடியும் வரையில் அதில் ஒரு கதாபாத்திரமாக இருந்து தப்பித்தால் மட்டுமே உயிரோடு வெளியே வர முடியும் என்கிற நிலை ஏற்படுகிறது.

இதிலிருந்து சந்தானம் எப்படி வெளியே வரப் போகிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது. படத்தில் முக்கிய விஷயமே இப்பொழுது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி சந்தானம் மாறி இருப்பதுதான்.
இதுவரை வந்த எந்த திரைப்படத்திலும் நடித்த நடிகர்கள் ஜென் சி என கூறப்படும் இப்பொழுது இருக்கும் தலைமுறைகளுக்கு ஏற்ற மாதிரியான ஒரு நடிகராக மாறி நடிக்கவில்லை. அதை சந்தானம் செய்திருப்பது படத்தில் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.
காமெடியை பொறுத்தவரை முன்பு வந்த பேய் படங்களுடன் ஒப்பிடும்பொழுது இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது ஆனால் சந்தானத்திற்கும் மொட்ட ராஜேந்திரனுக்கும் இடையேயான காமெடி காட்சிகள் எல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
இந்த கோடை விடுமுறைக்கு ஒரு ஃபேமிலி என்டர்டைன் திரைப்படமாக டிடி நெக்ஸ்ட் லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.