விஜயகாந்த் அப்ப பண்ணுன அந்த விஷயத்தை இப்போ விஜய் அஜித் கூட பண்ண முடியாது!.. மனம் நெகிழ்ந்த சரத்குமார்.
எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் போட்டி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலகட்டத்தில் துவங்கி இப்போது விஜய், அஜித் மற்றும் அதனை அடுத்த தலைமுறையாக வந்த சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என்று போட்டி என்பது தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ரஜினி கமல் காலகட்டத்தில் நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டு இருந்தாலும் கூட அவர்களுக்குள் இப்போது இருக்கும் அளவிற்கு பொறாமை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.
இது குறித்து சரத்குமார் ஒரு பேட்டியில் கூறும்பொழுது விஜயகாந்தும் நானும் அப்போது பெரும் போட்டி நடிகர்கள், ஆனாலும் நாங்கள் நண்பர்களாக இருந்தோம். ஏதாவது ஒரு நல்ல கதை விஜயகாந்திற்கு வந்தால் அந்த கதையில் அவர் நடிக்காமல் எனக்கு போன் செய்து சரத்குமார் உங்களுக்கு இந்த கதை நன்றாக இருக்கும் என தோன்றுகிறது எனவே இதில் நீங்கள் நடியுங்கள் என்பார்.
அதையும் தாண்டி விஜயகாந்த் என்னை வைத்தே ஒரு படம் தயாரித்தார் தமிழ் சினிமாவில் இப்போது இருப்பவர்கள் யாராவது போட்டி நடிகரை வைத்து படம் தயாரிப்பார்களா? அல்லது அவர்களுக்கு வரும் ஒரு படத்தை சரிப்பட்டு வரமாட்டேன் என்று வேறு நடிகருக்கு மாற்றி விடுவார்களா கண்டிப்பாக மாட்டார்கள். அந்த விஷயத்தில் விஜயகாந்திற்கு நிகர் விஜயகாந்த் மட்டும்தான் என்று சரத்குமார் கூறியிருந்தார்.
