News
வாத்தி 2 நாள் வசூல்!- மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் தனுஷ்!
தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ்க்கென்று எப்போதுமே தனி இடம் உண்டு. பொதுவாக வளர்ந்து வரும் கதாநாயகர்கள் தங்கள் திரைப்படங்களில் ஒரு சண்டை காட்சியாவது வைத்து மாஸ் காட்டியே நடித்து பழக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தனுஷ் மாதிரியான சில கதாநாயகர்கள் மட்டுமே காதலை முன்னிலைப்படுத்தி திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இருந்தாலும் தனுஷ்க்கு இந்த படங்கள் ஹிட் அடிக்கின்றன. ஏனெனில் அவர் தனது அனைத்து விதமான நடிப்பையும் மக்கள் மத்தியில் பதிய வைத்துள்ளார்.
தற்சமயம் தனுஷ் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் வாத்தி. கல்வி துறையில் நிகழும் வியாபார அரசியலை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியான நாள் முதலே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வந்தது.
தற்சமயம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது வாத்தி. முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி வசூல் செய்தது வாத்தி. தற்சமயம் மொத்தமாக 25 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் 100 கோடி வசூல் சாதனை செய்து சிவகார்த்திகேயன் தனுஷை விட முன்னிலையில் இருக்கிறார்.
ஒரு மாஸ் ஹிட் கொடுக்கும் பட்சத்தில் தனுஷ் அந்த இடத்தை பிடிப்பார் என நம்பப்படுகிறது.
