Latest News
அரசியலில் விஜய்யும் ரஜினியும் ஒண்ணு கிடையாது.. சூப்பர் ஸ்டாரை வைத்து செய்த இயக்குனர் அமீர்..!
Vijay, a famous actor in Tamil, started a party called T.V.K. After the party’s name and flag had already been announced, Vijay recently announced the party’s policies. Director Aamir has commented on this
தற்சமயம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் விஜய்யின் அரசியல் நுழைவுக்கு ஆதரவுகள் இருக்கின்றன.
மற்றொரு பக்கம் அதை எதிர்த்தும் பலரும் பேசி வருகின்றனர் விக்ரவாண்டியில் விஜய் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் மேலும் மக்கள் எதிர்பார்க்காத வகையில் பேச்சு ஒன்றை கொடுத்திருந்தார் விஜய்.
பெரும்பான்மையான மக்களுக்கு விஜய்யின் இந்த பேச்சு பிடித்திருந்தது என்றாலும் அரசியல் சார்ந்து இருப்பவர்களுக்கு அது பிடிக்கவில்லை அவர்கள் பெரும்பாலும் கூறும் பொழுது சினிமாவில் வசனங்கள் பேசுவது போலவே மேடையிலும் வந்து பேசி இருக்கிறார் விஜய் என்பது அவர்களது குற்றச்சாட்டாக இருந்தது.
அமீர் கூறிய விஷயம்:
இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில் தான் விஜய்யின் பேச்சுக்கள் இருந்தன. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர் பேசி இருந்தார். அவர் கூறும் பொழுது விஜய் முன்னெடுக்கும் அரசியல் ஆரோக்கியமானதாக தெரிகிறது.
அவர் அம்பேத்கர் பெரியார் அஞ்சலை அம்மாள் போன்றவர்களை தன்னுடைய தலைவர்களாக முன்னெடுக்கிறார். ஆனால் இதற்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அவர் ஆன்மீக அரசியல் என்று கூறினார்.
அதற்காக ராகவேந்திர ஸ்வாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் இவர் ராகவேந்திராவை இங்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மிக சொற்பமான நபர்கள் தான் ராகவேந்திரரை வணங்கி வந்தனர். எனவே அவரது அரசியல் தலைவராகவே ரஜினிகாந்த் ராகவேந்திராவை முன்னிருத்துகிறார். அந்த வகையில் பார்க்கும் பொழுது விஜயின் பார்வை தெளிவாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் அமீர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்