Connect with us

ஆளா விடுங்க சாமி!.. கௌதம் மேனன் கதையை கேட்க முடியாமல் ஓடிய அமீர்!..

ameer gautham menon

Tamil Cinema News

ஆளா விடுங்க சாமி!.. கௌதம் மேனன் கதையை கேட்க முடியாமல் ஓடிய அமீர்!..

Social Media Bar

Tamil Director Ameer : மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீ. அதற்கு முன்பு பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அமீர் பிறகு பாலாவுடன் ஏற்பட்ட சில சண்டைகள் காரணமாக தனியாக படம் எடுக்க வேண்டும் என வெளிவந்தார்.

அமீரின் முதல் படமான மௌனம் பேசியதே திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை என்றாலும் சூர்யாவிற்கு அது ஒரு முக்கியமாக படமாக அமைந்தது. அதற்கு பிறகுதான் சூர்யாவிற்கு அதிகமான வித்தியாசமான கதாபாத்திரம் கொண்ட பட வாய்ப்புகள் வந்தன.

அதனைத் தொடர்ந்து ராம் பருத்திவீரன் போன்ற படங்களை இயக்கினார் பருத்திவீரன் திரைப்படம் தமிழில் அமீர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம். அதனை தொடர்ந்து இயக்குனராக இருந்து வந்த அமீர் பிறகு நடிகராக மாறினார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ameer
ameer

அதனை தொடர்ந்து தற்சமயம் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் நடித்த மாயவலை திரைப்படம் சீக்கிரத்தில் சினிமாவிற்கு வர இருக்கிறது. பாலாவை விட்டு பிரிந்த இடைக்காலத்தில் அமீர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு முயற்சி செய்தார்.

அந்த நிலையில் நடிகர் விக்ரம் அமீரின் மீது கொண்ட அன்பினால் அவரைக் கூட வைத்துக் கொண்டார். விக்ரம் நடிக்கும் படத்திற்கான கதையை தேர்ந்தெடுக்கும் வேலையை அமீருக்கு கொடுத்திருந்தார் விக்ரம். அதன்படி ஒரு நாள் காக்க காக்க படத்தின் கதையை சொல்வதற்காக கௌதம் மேனன் விக்ரமை பார்க்க வந்திருந்தார்.

அமீரும் அவருடன் அமர்ந்திருந்தார் அப்பொழுது கௌதம் மேனன் கதையை சொல்ல துவங்கினார். ஆனால் முழுக்க முழுக்க கதையை ஆங்கிலத்திலேயே கூறினார் கௌதம் மேனன். அமீருக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது எனவே அவர் என்ன சொல்கிறார் என்பதே அமீருக்கு புரியவில்லை.

இதனால் ஒரு அளவுக்கு மேல் கடுப்பாகி வெளியே எழுந்து சென்று விட்டார் அமீர். அதன் பிறகு அவருக்கு போன் செய்த விக்ரம் ஏன் வெளியே சென்றீர்கள் என கேட்ட பொழுது எனக்கு சுத்தமாக ஆங்கிலமே தெரியாது சார் என கூறியுள்ளார். இதே போல கௌதம் மேனன் விஜய்க்கும் ஒரு கதையை ஆங்கிலத்திலேயே கூறியதால் விஜய் அந்த கதை வேண்டாம் என்று கூறிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

To Top