Connect with us

சூரியை அந்த படத்துல நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய் பட இயக்குனர்..!

vijay soorie

News

சூரியை அந்த படத்துல நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய் பட இயக்குனர்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக  காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி.

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு வரவேற்புகள் என்பது அதிகமாகவே இருந்து வந்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆவதற்கான வாய்ப்புகள் அவருக்கு வரும் என்பது அவரே நினைத்துப் பார்க்காத ஒரு விஷயம் என்று கூறலாம்.

சூரியின் கதை தேர்ந்தெடுப்பு:

ஆனால் கதை தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருந்துவிட்டார் சூரி. அந்த வகையில் அவரது முதல் திரைப்படம் விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் பேரும் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பைப் பெற்று தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்க துவங்கி வருகிறார்.

actor-soori
actor-soori

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஒரு காலத்தில் துள்ளாத மனமும் துள்ளும் மாதிரியான ஹிட் படங்களை எடுத்த இயக்குனர் எழில் சூரி குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது மனம் கொத்தி பறவை திரைப்படத்தை நான் இயக்கும்போது அதில் ஒரு கதாபாத்திரமாக சூரியும் நடித்திருப்பார். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்காக சூரி கேட்ட சம்பளம் மிகவும் அதிகமாக இருந்தது.

சூரிக்கு வந்த வாய்ப்பு:

அதனால் அவரை ஒரு சில காட்சிகளில் நடிக்க வைத்து விட்டு பிறகு அனுப்பி விடலாம் அதற்கு பதிலாக வேறு ஒரு காமெடி நடிகரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

Soori in a still from ‘Viduthalai’
Soori in a still from ‘Viduthalai’

அப்பொழுது நான் ஒரு காட்சியை படமாக இருந்த பொழுது அதை சிவகார்த்திகேயன் கேட்டுவிட்டு சூரியிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார் அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த காட்சியை வேறு மாதிரி மாற்றி விட்டனர்.

ஆனால் நான் சொன்னதை விடவும் பிறகு அந்த காட்சி நன்றாக இருந்தது இதனால் சூரியை அழைத்த நான் படப்பிடிப்பு தளத்தில் இன்னும் பத்து நாள் சேர்த்து நடித்து கொடுத்துவிட்டு போங்கள் என்று சூரியிடம் கூறினேன் அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகுதான் படம் முழுக்கவும் சூரி இருப்பது பல பார்த்துக் கொண்டேன் என்கிறார் இயக்குனர் எழில்.

Articles

parle g
madampatty rangaraj
To Top