Connect with us

ஏன் வில்லனுக்கு மட்டும்தான் வயசாகுமா? – உங்களுக்கு வயசாகாதா? ரஜினியை கலாய்த்த பிரபல இயக்குனர்!

Cinema History

ஏன் வில்லனுக்கு மட்டும்தான் வயசாகுமா? – உங்களுக்கு வயசாகாதா? ரஜினியை கலாய்த்த பிரபல இயக்குனர்!

Social Media Bar

ரஜினி நடித்த பல திரைப்படங்களில் ரஜினிகாந்த் இளமையாகவேதான் இருப்பார். ரஜினி என இல்லை. சினிமா என்றாலே அதில் கதாநாயகர்களுக்கு வயதே ஆகாது.

இருந்தாலும் இந்த மாதிரி நடிகர்கள் தொடர்ந்து இளமையாக நடித்துக்கொண்டிருக்கும் போது சில சமயங்களில் இயக்குனர்களிடம் கலாய் வாங்க வேண்டி இருக்கும்.

ரஜினி நடித்து பெரும் ப்ளாக் பஸ்டர் கொடுத்த திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது பாட்ஷாதான். பாட்ஷா அளவிற்கு ரஜினிகாந்தின் வேறு எந்த படமும் அதிகமாக பேசப்பட்டது கிடையாது. ஒவ்வொரு சினிமா ரசிகரும் குறைந்தது 3 தடவையாவது இந்த படத்தை பார்த்திருப்பர்.

பாட்ஷா படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தின் ப்ரிவீவ் ஷோவிற்கு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரையும் அழைத்திருந்தார் நடிகர் ரஜினி. ப்ரிவீவ் நிகழ்ச்சியில் படத்தை பார்த்துவிட்டு அனைவரும் சிறப்பாக இருக்கிறது என பேசி கொண்டிருந்தனர்.

ஆனால் கே.எஸ் ரவிக்குமாருக்கு மட்டும் படத்தில் சில தவறுகள் தெரிந்தது. அவர் ரஜினியிடம் பேசும்போது படத்தில் நீங்கள் மும்பையில் பாட்ஷாவாக இருக்கும்போது உங்களுக்கு எதிரியாக ஆண்டனி வருகிறார்.

பிறகு நீங்கள் அவரை சிறையில் அடைக்கிறீர்கள். இறுதியில் ஆண்டனி வரும்போது வயதானவராக இருக்கிறார். உங்களை சுற்றி உள்ளவர்கள் அனைவருக்கும் வயதாகி இருக்கும்போது நீங்கள் மட்டும் இளமையாக இருக்கிறீர்களே? ஏன் ஹீரோக்களுக்கு எல்லாம் வயசாகாதா? என கேட்டுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

அதற்கு படத்தின் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா பதிலளிக்கும்போது படத்திற்கு அது தேவையாக உள்ளது. இந்த தவறை மக்கள் பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டார்கள் என கூறினார். அதே போலவே படம் வெளியான போது அதை யாரும் பெரிய தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.

To Top