இந்த மாதிரி ஹோட்டல்லதான் சாப்புடுவியா? – ஆர்.ஜே பாலாஜியிடம் வியந்து பேசிய லோகேஷ் கனகராஜ்!

தற்சமயம் தமிழ் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறைந்த காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளார் லோகேஷ். இப்போது அவரது திரைப்படத்திற்கு என ஒரு ரசிக பட்டாளம் உருவாகியுள்ளது.

Social Media Bar

ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் லோகேஷ் எந்த ஒரு ஆடம்பரமும் அற்றவராக இருந்தார். அப்போதைய காலக்கட்டத்தில் உறியடி விஜயகுமார் மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் லோகேஷ் கனகராஜின் நண்பர்களாக இருந்தனர்.

அப்போதைய காலக்கட்டத்தில் நகைச்சுவையில் சற்று பிரபலமாகி இருந்தார் ஆர்.ஜே பாலாஜி. எனவே இவர்களை விடவும் ஆர்.ஜே பாலாஜி சற்று பிரபலமாக இருந்தார். இந்த நிலையில் இவர்கள் மூவரும் சாப்பிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

உடனே ஆர்.ஜே பாலாஜி ஒரு பெரும் ஹோட்டலுக்கு இவர்கள் இருவரையும் அழைத்து சென்றுள்ளார். அதுவரை பெரிய ஹோட்டல்களுக்கு எல்லாம் லோகேஷ் கனகராஜூம், உறியடி விஜய்குமார் இருவரும் வந்தது இல்லை. எனவே இருவரும் என்னடா எப்போதும் இந்த ஹோட்டலுக்குதான் சாப்பிட வருவியா? என வியப்பாக கேட்டனர்.

அப்படி இருந்த இயக்குனர்தான் தற்சமயம் 25 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இயக்குனராக மாறியுள்ளார்.