தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் இருந்தபோதும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு வங்கியில் சிறிய அளவிலான பணியாளராகதான் இருந்தார். மற்ற இயக்குனர்கள் போல உதவி இயக்குனராக இருந்து சினிமாவிற்கு வந்தவர் அல்ல லோகேஷ்.

எடுத்த உடனே படம் எடுக்கிறேன் என உள்ளே வந்துவிட்டார். ஆனால் படப்பிடிப்பு துவங்கும் வரை வங்கி வேலையையும் அவர் விடவில்லை. அவர் பணிப்புரியும் வங்கியில் ஒரு விதிமுறை உண்டு. வேலையை விட்டு நிற்பதாய் இருந்தால் மூன்று மாதங்களுக்கு முன்பே அதை அறிவிக்க வேண்டும்.
அப்படி அறிவிக்காமல் வேலையை விட்டு நிற்கும் பட்சத்தில் அவர்கள் வேறு எந்த வங்கியிலும் பணிப்புரிய முடியாமல் செய்துவிடும் நிர்வாகம். இந்த நிலையில் படப்பிடிப்பிற்கான அனைத்து வேலைகளையும் பார்த்தார் லோகேஷ். படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டனர்.
நாளை படத்தின் படப்பிடிப்பை துவங்க வேண்டும். இன்று வங்கியிடம் செல்லும் லோகேஷ் கனகராஜ் வேலையை விட்டு நிற்க போகிறேன். படம் எடுக்க போகிறேன். என கூறியுள்ளார். மேலும் வங்கி விதிமுறைப்படி மூன்று மாதக்காலம் வேலை பார்க்கவும் முடியாது என கூறியுள்ளார்.
ஒருவேளை படம் ஓடவில்லை சினிமாவில் வர முடியவில்லை என்றால் திரும்ப வங்கி வேலைக்கு வர முடியாது என நிர்வாகம் கூறியுள்ளது. அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் படத்தை எடுக்க கிளம்பியுள்ளார் லோகேஷ்.







