லியோ திரைப்படத்தில் இருந்து கிளம்பிட்டேன்! – மிஸ்கின் வெளியிட்ட புது அப்டேட்!

 தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. 

இந்தப் படத்தில் நடிகை திரிஷா, நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

Social Media Bar

 தற்சமயம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடந்து வருகிறது.  இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து காஷ்மீரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். படம் குறித்து சில விஷயங்களை வெளியிட்டுள்ளார் மிஷ்கின் அதில் அவர் கூறியுள்ளதாவது

“ இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ பட குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

  ஸ்டெண்ட் மாஸ்டர்கள்  அன்பறிவு மிகச் சிறப்பாக ஒரு சண்டைக்காட்சியை படமாக்கினார் உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனை போல் களத்தில் இறங்கி கொண்டிருந்தான் என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத் தழுவினான் அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். 

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்திலும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் அன்புடன் மிஸ்கின்” என கூறியுள்ளார்.