சம்பளத்தை இன்னும் அதிகரிக்க போறேன்! – மிஸ்கினுக்கு எகிறும் மார்க்கெட்!

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மிஸ்கின் தொடர்ந்து பல படங்களை இயக்கினார். அதில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை,

Social Media Bar

தற்சமயம் ஆண்ட்ரியாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இவை இல்லாமல் திரைப்படங்களிலும் கூட நடித்து வருகிறார். தற்சமயம் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திலும் மிஸ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு மார்க்கெட் அதிகரித்து வருவதால் தற்சமயம் அவரது சம்பளத்தை அதிகரித்துள்ளார். படத்தில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் மிஸ்கின்.

லியோ திரைப்படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் அடுத்த படங்களுக்கு இன்னமும் அதிகமாக கேட்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.