Cinema History
முரளியால் என் வாழ்க்கையில் நடந்த மாயாஜாலம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்.!
திறமை இருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் கருப்பாக இருந்தாலும் பெரிய உயரத்தை தொட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இருந்துள்ளனர். அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் முரளி.
இந்த நிலையில் முரளியுடன் தனது அனுபவம் குறித்து இயக்குனர் நாகராஜ் தெரிவித்துள்ளார். முரளி அந்த சமயங்களில் மிகவும் பிஸியாக இருந்தார். சின்ன இயக்குனர்கள் எல்லாம் அவரை சந்தித்து கதை சொல்ல வேண்டும் என்றாலே அதற்கு 6 மாத காலம் காத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் நாகராஜ் அன்று எப்படியோ முரளியிடம் பேசுவதற்கான வாய்ப்பை பெற்றார். முரளி கொஞ்ச நேரம்தான் எப்போதும் கதையை கேட்பார். ஆனால் நாகராஜ் கதை சொல்லும் விதம் மிகவும் மாறுபட்டதாக இருந்தது. எனவே முரளி பல மணி நேரங்கள் அந்த கதையை கேட்டார்.
கதையை கேட்டு முடிக்கும்போது மணி 1 ஆகியிருந்தது. அதற்கு பிறகு இயக்குனரை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டார். அப்போது நாகராஜ். சார் தயாரிப்பாளரிடம் என்ன சொல்வது என கேட்டார். அதற்கு பதிலளித்த முரளி நான் அவர்கிட்ட பேசிக்கிறேன் என சென்றுவிட்டார்.
மறுநாள் தயாரிப்பாளரை சந்தித்தார் நாகராஜ். யோவ் முரளிகிட்ட என்ன மாயம் செஞ்சே. பொதுவாக அவ்வளவு சீக்கிரம் படத்தில் கமிட் ஆக மாட்டார். ஆனால் இப்போ உன் கதை ரொம்ப பிடிச்சிட்டுன்னு சொல்றார். கால் ஷீட்டும் தரேன்னு சொல்லி இருக்கார் என கூறினார்.
அப்படி உருவான திரைப்படம்தான் தினந்தோறும். இந்த நிகழ்வை இயக்குனர் நாகராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
