Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் பொன்ராம். இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு முன்பு வரை சிவகார்த்திகேயனை பேரும் கதாநாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்த பொழுது சிவகார்த்திகேயனை விடவும் நடிகர் விமலுக்குதான் அதிக வரவேற்பு இருந்தது. ஏனெனில் அப்போது விமல் நடித்த களவாணி திரைப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அதிலிருந்து சிவகார்த்திகேயனுக்கு பெரும் வரவேற்பு ஏற்படுத்திய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம். பட்டி தொட்டி எல்லாம் அந்த படத்தில் டி. இமான் இசையமைத்த பாடல்கள் பிரபலமாகி இருந்தன.
அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து தான் பிறகு சிவகார்த்திகேயனுக்கும் வாய்ப்புகளும் அதிகமாக வரத்துவங்கின. இதனை அடுத்து ரஜினி முருகன், சீமா ராஜா என்று இன்னும் இரண்டு திரைப்படங்களுக்கு பொன் ராமிற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால் பொன்ராம் கடைசியாக இயக்கிய சீமராஜா எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார் பொன்ராம். இதற்காக முதலில் விஜய் சேதுபதியிடம் பேசியிருக்கிறார்.

ஆனால் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய டிஎஸ்பி திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத காரணத்தால் விஜய் சேதுபதி வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் சென்று இருக்கிறார். சிவகார்த்திகேயனும் தற்சமயம் வாய்ப்பு தர முடியாது என கூறவே நடிகர் சூரியிடம் சென்று குறித்து பேசி இருக்கிறார்.
ஆனால் சூரி ஏற்கனவே இரண்டு மூன்று திரைப்படங்கள் கமிட்டாகி இருப்பதால் அவற்றை முடித்துவிட்டு தான் பட வாய்ப்பு கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இறுதியாக விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனிடம் சென்று கதை கூறியிருக்கிறார். இன்னும் இதுக்குறித்து சண்முக பாண்டியன் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒருவேளை பொன்ராம் சண்முக பாண்டியனுக்கு ஒரு வெற்றி படத்தை இயக்கும் பட்சத்தில் அது அவரது குடும்பத்திற்கு பொன்ராம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.