Connect with us

டைம் டிராவல் கதையா? சூரியின் கதாபாத்திரம் என்ன? லீக்கான ஏழு கடம் ஏழு மலை கதை..!

Tamil Trailer

டைம் டிராவல் கதையா? சூரியின் கதாபாத்திரம் என்ன? லீக்கான ஏழு கடம் ஏழு மலை கதை..!

Social Media Bar

2019 ஆம் ஆண்டு வந்த பேரன்பு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் தமிழில் திரைப்படங்களே வராமல் இருந்தது. இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளனர். சொல்ல போனால் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முன்பே சூரியை கதாநாயகன் ஆக்கியவர் இயக்குனர் ராம்தான். ஏனெனில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் படப்பிடிப்பு முன்பே துவங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே படத்தின் கதை ஊகிக்கப்பட்டு வருகிறது. கதைப்படி நடிகர் சூரி ஊருக்கு செல்வதற்காக ஒரு ரயிலில் ஏறுகிறார். ரயிலில் இருந்த அனைவரும் இறங்கிய பிறகு அந்த ரயிலில் ஒரு எலி ஏறுகிறது.

அதிலிருந்து ரயில் காலப்பயணத்தை துவங்குகிறது. அப்போதுதான் ஓடும் ரயிலில் நிவின் பாலி ஏறுகிறார். நிவின் பாலி காலப்பயணம் செய்யக்கூடியவர். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் பயணம் செய்து அவர் தன்னுடைய காதலியான அஞ்சலியை தேடுகிறார்.

அதற்காக இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்கிறார். ஆனால் அதில் சூரியும் மாட்டிக்கொள்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கதை எப்படி செல்கிறது என்பதாக படம் இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top