Tamil Cinema News
350 நடிகைகள் ஷங்கர் மீது புகார்.! இந்த பிரச்சனையை சரி செய்யுங்க..!
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர்.
ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட பாடல்கள் மாதிரியான விஷயங்களுக்கு அதிகமாக பணத்தை செலவு செய்து விடுவார்.
இதனால் அவரது படம் அதிகபட்ஜெட் படமாக மாறிவிடும். இப்படியாக சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் போனது.
கேம் சேஞ்சர் திரைப்படம் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் உருவான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் இந்தியன் 2 அளவுக்கு கூட வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிறகும் ஒரு பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு பாடலுக்கு 350 நடிகர் நடிகைகளை நடிக்க வைத்திருக்கின்றனர். அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் களுக்கு சரியான சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இது குறித்து அவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
